ரஞ்சி பைனல்ல நேர்ல பாக்க போனது ஒரு குத்தமா? சிக்கலில் சிக்கிய கேப்டன் ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

Rohit-mum-vs-vid
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கோப்பை தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் விதர்பா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. அந்த வகையில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி துவங்கிய இந்த இறுதிப்போட்டியில் முதலாவதாக விளையாடிய மும்பை அணி 224 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய விதர்பா அணி 105 ரன்களுக்கு சுருண்டது.

அதனை தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய மும்பை அணி 418 ரன்களை குவிக்க தற்போது விதர்பா அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் 5 விக்கெடுகளை 248 ரன்கள் அடித்துள்ள விதர்பா அணி கடைசி நாளில் 290 ரன்கள் அடித்தால் வெற்றி இலக்குடன் விளையாட இருக்கிறது.

- Advertisement -

இதனால் மும்பை அணியின் வெற்றி வாய்ப்பும் பிரகாசம் ஆகிவிட்டது. இந்நிலையில் இந்த ரஞ்சிக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை காண சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ரோகித் சர்மா போன்ற வீரர்கள் நேரில் சென்று இருந்தனர்.

அப்போது இந்திய அணியின் கேப்டனான ரோகித் சர்மா வீரர்களின் ஓய்வறையில் அமர்ந்து போட்டியை கண்டு ரசித்தது மட்டுமின்றி அங்கு செல்போன் பயன்படுத்தியது தான் தற்போது அனைவரது மத்தியிலும் பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் பிசிசிஐ விதிமுறைப்படி : வீரர்களின் ஓய்வறையில் யாரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. அது சர்வதேச போட்டியாக இருந்தாலும் சரி, உள்ளூர் போட்டியாக இருந்தாலும் சரி அந்த விதிமுறையினை கடைபிடித்தே ஆக வேண்டும். ஆனால் அதை மீறி தற்போது ரோகித் சர்மா செல்போனை பயன்படுத்தியது குறித்த வீடியோ வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் 2024 : தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு – கொல்கத்தா சவால் விடுமா? புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

அந்த வீடியோவையும் பிசிசிஐ-யே வெளியிட்டுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இருப்பினும் ரோகித் சர்மாவிடம் இதுகுறித்து நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கவும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பி.சி.சி.ஐ-யே இந்த வீடியோவை பகிர்ந்து உள்ளதால் இதனை பெரிய விடயமாக மாற்ற மாட்டார்கள் என்றே தெரிகிறது.

Advertisement