ஐபிஎல் 2024 : தோனி தலைமையிலான சிஎஸ்கே அணிக்கு – கொல்கத்தா சவால் விடுமா? புள்ளிவிவரம்.. விரிவான அலசல்

CSK vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் எம்எஸ் தோனி தலைமையிலான நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் 6வது கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. அதற்கு சவால் கொடுப்பதற்காக தயாராக உள்ள 10 அணிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2012 ஃபைனலில் தோல்வியை கொடுத்தது போல் சென்னைக்கு சவாலை கொடுக்கும் ஒரு அணியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏனெனில் இம்முறை 2 கோப்பைகளை வென்று கொடுத்த கௌதம் கம்பீர் ஆலோசகராக செயல்பட வந்துள்ள கொல்கத்தா அணிக்கு ஸ்ரேயாஸ் ஐயர் காயத்திலிருந்து குணமடைந்து கேப்டனாக விளையாட உள்ளது பலமாக பார்க்கப்படுகிறது. மேலும் துவக்க வீரராக ஆப்கானிஸ்தானின் ரஹமனுல்லா குர்பாஸ் அதிரடியாக விளையாட தயாராக உள்ளார். இருப்பினும் 2021 சீசனில் அசத்தியதை போல மற்றொரு துவக்க வீரர் வெங்கடேஷ் ஐயர் மீண்டும் அசத்த வேண்டியது அவசியமாகிறது.

- Advertisement -

சென்னை – கொல்கத்தா:
அதே போல மிடில் ஆர்டரில் நிதீஷ் ராணா, மனிஷ் பாண்டே ஆகியோர் அதிரடியாக விளையாடுவதற்கு தடுமாறுவது கொல்கத்தாவுக்கு பின்னாடைவாக பார்க்கப்படுகிறது. ஆனால் லோயர் மிடில் ஆர்டரில் ஆண்ட்ரே ரசல், ரிங்கு சிங் ஆகியோர் சரவெடியாக விளையாடி எதிரணியிடம் இருந்து வெற்றியை பறித்துக் கொடுக்கும் அளவுக்கு தரமான ஃபினிஷர்களாக இருப்பது கொல்கத்தாவின் பெரிய பலமாகும்.

மேலும் அவ்வப்போது பேட்டிங்கில் அசத்தக்கூடிய சுனில் நரேன், வருண் சக்கரவர்த்தி, முஜீப் உர் ரஹ்மான், சூயஸ் சர்மா ஆகியோர் அடங்கிய சுழல் பந்து வீச்சு கூட்டணி வலுவாகவே இருக்கிறது. அத்துடன் வேகப்பந்து வீச்சு துறையில் 24.75 கோடிக்கு வாங்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் கொல்கத்தா அணியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

- Advertisement -

இருப்பினும் அவருக்கு கை கொடுப்பதற்கு அதே அளவுக்கு சமமான தரத்தை கொண்ட இந்திய வேகப்பந்து வீச்சாளர் கொல்கத்தா அணியில் இல்லை. எனவே ஆண்ட்ரே ரசல், வெங்கடேஷ் ஐயர் போன்ற ஆல் ரவுண்டர்களும் சேட்டன் சக்காரியா போன்ற இளம் வீரர்களும் சிறப்பாக செயல்படுவது அவசியம். அதே சமயம் கஸ் அட்கின்ஷன், சேர்ஃபான் ரூதர்போர்ட், ஹர்ஷித் ரனா மற்றும் ரமன்தீப் சிங் போன்ற புதிதாக வாங்கப்பட்ட வீரர்கள் கொல்கத்தா அணிக்காக பேக்-அப் வீரர்களாக அசத்தும் தரத்தை கொண்டுள்ளனர்.

மறுபுறம் சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கைக்வாட் – ரச்சின் ரவீந்திரா ஆகியோர் உலகத்தரம் வாய்ந்த இளம் துவக்க வீரர்களாக வலு செய்கின்றனர். அவர்களைத் தொடர்ந்து மிடில் ஆர்டரில் அஜிங்கிய ரஹானே, மொயின் அலி, டார்ல் மிட்சேல் ஆகிய அனுபவமிகுந்த பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ரன்கள் குவிக்கும் திறமையைக் கொண்டுள்ளனர். அப்படியே லோயர் மிடில் ஆர்டரில் ரவீந்திர ஜடேஜா, கடந்த வருடம் உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்திய சிவம் துபே, கேப்டன் எம்எஸ் தோனி ஆகியோர் ஃபினிஷர்களாக அசத்தும் திறமையைக் கொண்டுள்ளார்கள் என்பதில் சந்தேகமில்லை.

- Advertisement -

அதே போல் பதிரனா, தீபக் சஹர், சர்துல் தாக்கூர், முஸ்தபிர் ரகுமான் ஆகியோர் ஏற்கனவே தங்களுடைய திறமையை நிரூபித்த கிளாஸ் நிறைந்த வேகப்பந்து வீச்சாளர்களாக சென்னைக்கு பலம் சேர்க்கின்றனர். மஹீஸ் தீக்சனாவுடன் பேட்டிங்கிலும் அசத்தக்கூடிய ஜடேஜா, மிட்சேல் சான்ட்னர், மொயின் அலி ஆகியோரை கொண்ட சென்னையின் சுழல் பந்து வீச்சு கூட்டணி தரமானதாக இருக்கிறது.

இதையும் படிங்க: சச்சினுக்கு அடுத்து தோனிகிட்ட மட்டும் அந்த மேஜிக் இருக்கு.. மனதார புகழ்ந்த – சுரேஷ் ரெய்னா ஓபன்டாக்

மேலும் ராயுடுவின் இடத்தை நிரப்புவதற்காக வாங்கப்பட்டுள்ள டார்ல் மிட்சேல், சிவம் துபே ஆகியோர் தேவைப்பட்டால் பவுலிங் துறையிலும் தாக்கூர், சஹர் ஆகியோர் பேட்டிங் துறையிலும் அசத்தக்கூடியவர்கள் என்பதை ரசிகர்கள் அறிவார்கள். அத்துடன் முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பாண்டே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சமீர் ரிஸ்வி போன்ற திறமையான இளம் பேக்-அப் வீரர்களும் வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

Advertisement