புது பையனே நல்லா போடுறான்.. உனக்கென்ன? முகமது சிராஜ் மீது அதிருப்தி அடைந்த ரோஹித் சர்மா – என்ன நடந்தது?

Siraj
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணியானது முதல் மூன்று போட்டிகளில் முடிவில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியானது ராஞ்சி நகரில் பிப்ரவரி 23-ஆம் தேதியான இன்று துவங்கி நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தாலும் அடுத்தடுத்து இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் நான்காவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் விளையாடி வருகிறது.

- Advertisement -

அதே போன்று இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்பதனால் இங்கிலாந்து அணியும் இந்திய அணிக்கு எதிராக பலமான ஆட்டத்தை விளையாட முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக இந்த போட்டியானது சுவாரசியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வேளையில் இந்த நான்காவது போட்டியின் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்சை விளையாடி வருகிறது. அதன்படி முதல் நாளின் உணவு இடைவேளை வரை தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி 112 ரன்களை மட்டுமே குவித்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் தீப் இங்கிலாந்து அணியின் டாப் 3 வீரர்களையும் வீழ்த்தி அட்டகாசமாக தனது ஸ்பெல்லை துவங்கியுள்ளார். அதே வேளையில் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் இந்த மைதானத்தில் ஸ்விங்கை தேடி மோசமான பந்துகளை வீசி முதல் நான்கு ஓவர்களிலேயே 27 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

இதையும் படிங்க : பும்ராவிற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டதை நியாயப்படுத்திய ஆகாஷ் தீப் – முதல் 7 ஓவரிலேயே தரமான சம்பவம்

அதிலும் குறிப்பாக ஓவரே ஓவரில் 19 ரன்களை விட்டுக் கொடுக்க கேப்டன் ரோகித் சர்மா அவர்மீது சற்று கடுப்பானார். இதன் காரணமாக முஹமது சிராஜிடம் தொடர்ச்சியாக சரியான இடத்தில் பந்து வீசுமாறு அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தார். இருப்பினும் முகமது சிராஜ் இந்த இன்னிங்ஸில் முதல் 6 ஓவரிலேயே 43 ரன்களை விட்டுக் கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இதன் காரணமாக அதிருப்தியடைந்த ரோஹித் சர்மா உடனடியாக சிராஜின் ஸ்பெல்லை கட் செய்து விட்டு அஷ்வின் மற்றும் ஜடேஜாவையே பயன்படுத்தி வருகிறார்.

Advertisement