பும்ராவிற்கு பதிலாக தேர்வு செய்யப்பட்டதை நியாயப்படுத்திய ஆகாஷ் தீப் – முதல் 7 ஓவரிலேயே தரமான சம்பவம்

Bumrah-and-Akash
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று பிப்ரவரி 23-ஆம் தேதி ராஞ்சி நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தங்களது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் தங்களது ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக இந்த முதல் இன்னிங்சை துவங்கியது.

இருப்பினும் போட்டியின் பத்தாவது ஓவரின் போது இங்கிலாந்து அணி 47 ரன்கள் எடுத்திருந்த வேளையில் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பென் டக்கெட் முதல் விக்கெட்டாக ஆட்டம் இஷாந்தார். அதனை தொடர்ந்து அதே ஓவரில் ஒல்லி போப்பும் ரன் எதுவும் எடுக்காமல் எடுக்காமல் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 47 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

- Advertisement -

பின்னர் மற்றொரு துவக்க வீரரான ஜாக் க்ராவிலியும் 42 ரன்கள் குவித்து ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 57 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னர் ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஓரளவு சுதாரித்து விளையாட 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த வேளையில் ஜானி பேர்ஸ்டோ 38 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து பென் ஸ்டோக்சும் 3 ரன்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி முதல் நாளின் உணவு இடைவேளையின் போது 5 விக்கெட்டுகளை இழந்து வெறும் 112 ரன்களை மட்டுமே குவித்து தருமாறி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக இதுவரை ஆகாஷ் தீப் 3 விக்கட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர். இந்த போட்டியின் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஆகாஷ் தீப் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி தான் ஏன் பும்ராவிற்கு மாற்று வீரராக தேர்வு செய்யப்பட்டேன் என்பதை நியாயப்படுத்தி உள்ளார்.

இதையும் படிங்க : 57/3 டூ 112/5.. பார்ட்னர்ஷிப்பை உடைத்த அஸ்வின்.. இங்கிலாந்துக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை

அந்த வகையில் இந்த போட்டியின் போது துவக்கத்திலேயே தொடர்ச்சியாக 7 ஓவர்கள் வீசிய ஆகாஷ் தீப் வெறும் 24 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து இங்கிலாந்து அணியின் முதல் மூன்று பேட்ஸ்மேன்களை வீழ்த்தி தனது டெஸ்ட் கரியரை அட்டகாசமான துவங்கி உள்ளார். அவரது இந்த சிறப்பான பந்துவீச்சிற்கு தற்போது ரசிகர்கள் மத்தியிலும் பாராட்டுக்கள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement