57/3 டூ 112/5.. பார்ட்னர்ஷிப்பை உடைத்த அஸ்வின்.. இங்கிலாந்துக்கு எதிராக முதல் வீரராக மாபெரும் சாதனை

- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் இரண்டு வெற்றிகளை பெற்ற இந்தியா 2 – 1* என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. அதை தொடர்ந்து இந்த தொடரின் 4வது போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி ராஞ்சியில் தொடங்கியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

குறிப்பாக இத்தொடரை வெல்லும் வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள இந்த போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இங்கிலாந்து களமிறங்கியது. அதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த அந்த அணிக்கு 47 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்த பென் டக்கெட்டை 11 ரன்களில் அவுட்டாக்கிய அறிமுக வீரர் ஆகாஷ் தீப் அடுத்ததாக வந்த ஓலி போப்பை டக் அவுட்டாக்கினார்.

- Advertisement -

அஸ்வின் சாதனை:
அதோடு நிற்காத அவர் மறுபுறம் அதிரடியாக விளையாடி 42 ரன்கள் குவித்து சவாலை கொடுத்த மற்றொரு துவக்க வீரர் ஜாக் கிராவ்லியையும் க்ளீன் போல்ட்டாக்கி இந்தியாவுக்கு அபாரமான துவக்கத்தை கொடுத்தார். அதனால் 57/3 என தடுமாறிய இங்கிலாந்துக்கு அடுத்ததாக ஜோடி சேர்ந்த ஜோ ரூட் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் ஜோடி சேர்ந்து சரிவை சரி செய்யப் போராடினர்.

அந்த வகையில் நான்காவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடியில் ஜோ ரூட் நிதானமாக விளையாடினார். ஆனால் அவருடன் சேர்ந்து எதிர்ப்புறம் 4 பவுண்டரி 1 சிக்சரை பறக்க விட்ட ஜானி பேர்ஸ்டோ இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுத்தார். இருப்பினும் இந்த ஜோடியை முக்கிய நேரத்தில் பிரித்த ரவிச்சந்திரன் அஸ்வின் 38 ரன்களில் பேர்ஸ்டோவை எல்பிடபுள்யூ முறையில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

இந்த விக்கெட்டையும் சேர்த்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிராக ரவிச்சந்திரன் அஸ்வின் 23 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அஸ்வின் படைத்துள்ளார். அவருக்கு அடுத்தபடியாக பிஎஸ் சந்திரசேகர் 23 போட்டிகளில் 95 விக்கெட்டுகள் எடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: 24 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய டெஸ்ட் அணியில் ஏற்பட்டுள்ள அரிதான நிகழ்வு – விவரம் இதோ

அதைத்தொடர்ந்து நடந்த போட்டியில் அடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸை 3 ரன்களில் ரவீந்திர ஜடேஜா அவுட்டாக்கினார். அதனால் 57/3 என தடுமாற்ற துவக்கத்தை பெற்ற இங்கிலாந்து முதல் நாள் உணவு இடைவெளியில் மீண்டும் 112/5 என திணறி வருகிறது. அந்த அணிக்கு களத்தில் ஜோ ரூட் 12* ரன்களுடன் நிதானமாக விளையாடி வருகிறார். மறுபுறம் இங்கிலாந்தை முதல் நாளில் ஆல் அவுட் செய்யும் முனைப்புடன் இந்திய பவுலர்கள் பந்து வீசி வருகின்றனர்.

Advertisement