- Advertisement -
இந்திய கிரிக்கெட்

கம்பீருக்காக அபிஷேக் நாயரை பலி கிடாவாக்கிய பிசிசிஐ.. ரோஹித், ராகுல் கருத்தை ஆதரமாக ரசிகர்கள் விமர்சனம்

இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் மோசமாக விளையாடி தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக பேட்டிங் துறையில் விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் யாருமே சிறப்பாக விளையாடவில்லை. அதனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு முதல் முறையாக தகுதி பெறாமல் இந்தியா வெளியேறியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

அந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய தொடரில் சந்தித்த தோல்வியை கருத்தில் கொண்டு இந்திய அணியில் சில மாற்றங்களை நிகழ்த்துவதாக பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன் படி பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் இந்திய அணியிலிருந்து நீக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்தது. மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்தது.

- Advertisement -

பலி கிடாவாக அபிஷேக்:

அது ஒரு புறமிருக்க ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற 2025 ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் சென்னையை 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. அந்த வெற்றிக்கு நம்பிக்கை நட்சத்திரம் ரோகித் சர்மா 73* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றார். சமீப காலங்களாக தடுமாற்றமாக விளையாடி வந்த ரோஹித் சர்மா கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தார்.

அதற்கு இந்தப் போட்டியில் பதிலடி கொடுக்கும் வகையில் அசத்திய ரோகித் ஆட்டநாயகன் விருதை வென்று தன்னை சாம்பியன் பிளேயர் என்பதை நிரூபித்தார். இந்நிலையில் பேட்டிங்கில் மீண்டும் அசத்த உதவியதற்காக அபிஷேக் நாயருக்கு இன்ஸ்டாகிராமில் ரோஹித் சர்மா “தேங்க்ஸ் ப்ரோ” என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இது போக சமீபத்தில் சென்னைக்கு எதிராக கேஎல் ராகுல் சிறப்பாக விளையாடி டெல்லி அணியின் வெற்றியில் பங்காற்றினார்.

- Advertisement -

ரசிகர்கள் விமர்சனம்:

அந்தப் போட்டியின் முடிவில் அபிஷேக் நாயர் தமக்கு உதவியது பற்றி ராகுல் பேசியது பின்வருமாறு. “அபிஷேக் நாயருக்கு பெரியப் பாராட்டுக்கள். இந்திய அணியில் மீண்டும் வந்தது முதல் அவருடன் நான் நிறைய வேலை செய்துள்ளேன். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் என்னுடைய ஆட்டத்தை முன்னேற்றுவதற்காக அவருடன் நான் மணிக்கணக்கில் பயிற்சி செய்தது தற்போது உதவுகிறது” என்று கூறினார்.

இதையும் படிங்க: 6 மாசம்.. சம்பள பாக்கியை எப்போ தருவீங்க? அதை மீறியதால் தரமுடியாது.. கில்லஸ்பிக்கு பாக் வாரியம் பதிலடி

இந்தக் கருத்துக்களை தற்போது ஆதாரமாக எடுத்துள்ள ரசிகர்கள் கௌதம் கம்பீர் மற்றும் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்படவில்லை என்பதை மறைக்க பிசிசிஐ அபிஷேக் நாயரை பலிக் கிடாவாக அணியிலிருந்து நீக்கியுள்ளதாக விமர்சிக்கின்றார்கள். இருப்பினும் அதற்கெல்லாம் கவலைப்படாத அபிஷேக் நாயர் தற்போது கொல்கத்தா அணியின் துணைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். பிசிசிஐ நீக்கிய 2வது நாளில் அவர் கொல்கத்தா அணியில் தம்முடைய பழைய வேலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -