எவ்ளோ எச்சரித்தும் கேக்காமல் தற்போது அணியை பிரச்சனையில் தள்ளிய ரோஹித் சர்மா – இதெல்லாம் தேவையா?

- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக தள்ளிவைக்கப்பட்ட வேளையில் அந்த போட்டியானது ஜூலை 1-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை பர்மிங்காமில் நடைபெறும் என்று ஏற்கனவே அட்டவணையை வெளியாகியிருந்தது. அதன்படி தற்போது ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து சென்று பயிற்சி போட்டியில் விளையாடி வருகின்றது.

Rishabh Pant

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடர் துவங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தற்போது இந்திய அணியானது இந்தப் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் இருந்து வீரர்கள் இங்கிலாந்து புறப்படும்போது இந்திய அணியின் முதன்மை சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக அவர் இந்தியாவிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்குப் பிறகு தற்போது இந்திய அணியுடன் இணைந்து உள்ளார்.

இந்த தொடரில் பயோ பபுள் பாதுகாப்பு வளையம் ஏதும் இல்லாத காரணத்தினால் இந்திய அணியின் வீரர்கள் பொதுவெளியில் எந்தவித பாதுகாப்பும் இன்றி சுற்றி வந்தனர். அப்போதே பிசிசிஐ நிர்வாகமும் வீரர்கள் இதே போன்று வெளியில் சுற்றக் கூடாது என்றும் அதிலும் குறிப்பாக ரசிகர்களுடன் பொதுவெளியில் புகைப்படங்களை எடுத்துக் கொண்ட கேப்டன் ரோகித் மற்றும் விராட் கோலி ஆகியோரையும் கண்டித்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று எச்சரித்திருந்தது.

Rohith

இந்நிலையில் ஜூலை 1-ஆம் தேதி நடைபெறும் இந்த 5-வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பயிற்சி போட்டியின் முதல் நாளில் விளையாடிய ரோகித் சர்மா 2-ஆம் நாள் ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. அதன்பிறகு ரோகித் சர்மா ஏன் பங்கேற்கவில்லை என்பதற்கான காரணம் வெளியாகியுள்ள வேளையில் அவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

ஏற்கனவே பிசிசிஐ நிர்வாகம் கொரோனா தாக்கம் இன்னும் முற்றிலுமாக குறையவில்லை என்பதனால் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்று வீரர்களை எச்சரித்த வேளையில் ரோகித் சர்மா அலட்சியமாக நடந்து கொண்டு தற்போது கொரோனா பாதிப்பில் சிக்கி உள்ளதால் அவரால் இந்த போட்டியில் பங்கேற்க முடியாது என்று கூறப்படுகிறது. அவரது இந்த பாதிப்பு தற்போது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற – டாப் 5 வீரர்களின் பட்டியல் இதோ

பயிற்சிப் போட்டியில் ரோகித் சர்மாவுடன் சுப்மன் கில் துவக்க வீரராக களமிறங்கி உள்ளதாலும் அவரை சுற்றி நிறைய வீரர்கள் விளையாடி உள்ளதால் மேலும் சில வீரர்களுக்கு கொரோனா பரவல் ஏற்படும் அச்சமும் தற்போது இந்திய அணிக்குள் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement