சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற – டாப் 5 வீரர்களின் பட்டியல் இதோ

Kohli gavaskar
- Advertisement -

கிரிக்கெட் விளையாட்டில் நாட்டுக்காக சர்வதேச அரங்கில் ஒரு போட்டியிலாவது மிகச் சிறப்பாக செயல்பட்டு வெற்றிக்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வெல்ல வேண்டும் என்பதே ஒவ்வொரு வீரனின் மிகப்பெரிய லட்சியமாக இருக்கும். அதற்காக தீவிரமான வலை பயிற்சிகளை மேற்கொண்டு போட்டி நாளில் தரமான எதிரணிக்கு எதிராக களமிறங்கும் வீரர்கள் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி வெற்றிக்காக முடிந்த அளவுக்கு போராடுவார்கள். இருப்பினும் எதிரணியில் இருப்பவர்கள் அவர்களது நாட்டுக்கு வெற்றி பெறும் நோக்கத்தில் விளையாடுவதால் ஒரு வீரர் களமிறங்கும் அத்தனை போட்டிகளிலும் அல்லது பெரும்பாலான போட்டிகளில் ஆட்டநாயகன் விருதை வெல்லும் அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்படுவது மிகவும் கடினமாகும்.

Mohinder Amarnath Kapil Dev 1983 World Cup

- Advertisement -

அந்த நிலைமையில் சர்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகள் தொடர்களாக நடைபெறுவதால் அதில் ஒன்றுக்கும் மேற்பட்ட போட்டிகளில் அற்புதமான பார்மில் தொடர்ச்சியாக எதிரணிகளை தெறிக்கவிடும் வீரர்கள் அந்தத் தொடரில் தங்களது நாட்டிற்காக நிறைய வெற்றிகளைப் பெற்றுக் கொடுப்பதுடன் இறுதியில் வெற்றி கோப்பையையே வெல்வதற்கு முக்கிய பங்காற்றுவார்கள். அப்படிப்பட்ட தரமான வீரர்களை கௌரவிக்கும் நோக்கிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் தொடர் நாயகன் விருது வழங்கப்படுகின்றன. மேலும் ஒருசில உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் மட்டுமே டெஸ்ட் மற்றும் ஒருநாள் என எந்த வகையான கிரிக்கெட்டாக இருந்தாலும் ஒரே மாதிரியாக மிகச் சிறப்பாக செயல்பட்டு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதுகளை வென்று குவிப்பார்கள்.

தொடர் நாயகர்கள்:
அதிலும் ஐசிசி நடத்தும் உலக கோப்பையையே தங்களது நாடு வெல்லும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு தொடர் நாயகன் விருதுகளை வெல்வதெல்லாம் பேட்ஸ்மேன் அல்லது பந்து வீச்சாளர் என யாராக இருந்தாலும் அது மிகப்பெரிய சாதனையாகும். இருப்பினும் ஒருசில சமயங்களில் தங்களது உயிரை முழு மூச்சாக கொடுத்து அற்புதமாக செயல்பட்டாலும் ஒரு வீரர் விளையாடும் அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பையை வெல்லத் தவறினாலும் அவரின் திறமைக்கு தலைவணங்கி தொடர் நாயகன் விருதை அவருக்கு சமர்ப்பித்த தருணங்களையும் பார்த்துள்ளோம். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற 5 வீரர்களை பற்றி பார்ப்போம்.

Jayasuriya

5. சனாத் ஜெயசூரியா 13: 90களில் வெறித்தன ஓபனிங் பேட்ஸ்மேனாகவும் அவ்வப்போது சுழல்பந்து வீச்சில் மாயாஜாலம் நிகழ்த்த கூடியவராகவும் வலம் வந்த இவர் இலங்கைக்கு பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இலங்கை வரலாற்றில் முதலும் கடைசியுமாக வென்ற 1996 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றது உட்பட மொத்தம் 13 விருதுகளை வென்றுள்ள இவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற இலங்கை வீரராக சாதனை படைத்து இப்பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

Kallis

4. ஜேக் காலிஸ் 15: பேட்டிங்கில் சச்சினும் பந்துவீச்சில் ஜாஹிர் கானும் கலந்த கலவையை போல இந்த உலகமே கண்ட மகத்தான ஆல்-ரவுண்டராக கருதப்படும் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த இவர் அந்த அணிக்கு தனது பேட்டிங் மற்றும் பந்து வீச்சால் பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

- Advertisement -

இன்று உலகில் ஒரு ஆல்-ரவுண்டராக விளையாடும் வீரர் இவரைப்போல் வரவேண்டும் என்று ரோல் மாடலாக நினைக்கும் அளவுக்கு அற்புதமாக செயல்பட்ட 15 தொடர் நாயகன் விருதுகளுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற தென் ஆப்பிரிக்க வீரராக இப்பட்டியலில் 4-வது இடம் பிடிக்கிறார்.

Shakib 1

3. சாகிப் அல் ஹசன் 16: இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசம் கிரிக்கெட்டில் இன்னும் முழுமையான வளர்ச்சியை எட்டவில்லை என்றாலும் அந்த நாடு உருவாக்கிய வீரர்களில் ஜாம்பவானாக போற்றும் அளவுக்கு ஒருவர் இருக்கிறார் என்றால் அது இவராகும்.

- Advertisement -

ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக 2019 உலகக் கோப்பை உட்பட அந்த அணிக்கு பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்து மொத்தம் 16 விருதுகளை வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வங்கதேச வீரராக சாதனை படைத்து இப்பட்டியலில் 3-வது இடம் பிடிக்கிறார்.

Kohli-1

2. விராட் கோலி 19: ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பின் அவரைப் போலவே அவரின் இடத்தில் ரன் மெஷினாக கடந்த பல வருடங்களாக இந்திய பேட்டிங் துறையின் முதுகெலும்பாக பல சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்து வரும் இவர் அவரைப் போலவே அவரின் வழியில் ரன்களையும் சதங்களையும் அடித்து சாதனைகளை செய்து வருகிறார். மொத்தம் 19 விருதுகளை வென்றுள்ள இவர் இப்பட்டியலில் 2-வது இடம் பிடிக்கிறார்.

அதிலும் 2014, 2016 ஆகிய அடுத்தடுத்த டி20 உலகக் கோப்பைகளில் ரன் மெஷினாக எதிரணிகளை பிரித்து மேய்ந்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்த போதிலும் இறுதி மற்றும் அரையிறுதிப் போட்டிகளில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் அந்த 2 உலகக் கோப்பைகளின் தொடர் நாயகன் விருதுகள் இவரின் திறமைக்கும் ஆட்டத்திற்கும் சமர்ப்பிக்கப்பட்டது.

sachin

1. சச்சின் டெண்டுல்கர் 20: 16 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் காலடி வைத்து உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் பந்தாடி இந்திய பேட்டிங்கை தோள் மீது சுமந்து 2 தசாப்தங்களாக பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இவர் சர்வதேச கிரிக்கெட்டில் படைக்காத சாதனைகளே கிடையாது எனலாம்.

அதுவும் 90களில் இவர் அடித்தால்தான் இந்தியா வெற்றி பெறும் என்ற சூழ்நிலையில் முடிந்த அளவு அற்புதமாக செயல்பட்டு பல சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த இந்த ஜாம்பவான் 20 தொடர் நாயகன் விருதுகளை வென்று சர்வதேச கிரிக்கெட்டில் அதிக தொடர் நாயகன் விருதுகளை வென்ற வீரராக சாதனை படைத்துள்ளார். அதுவும் 2003 உலக கோப்பையில் 673 ரன்களை தெறிக்க விட்டு வெற்றிக்காக போராடிய போதிலும் இந்தியா தோல்வியடைந்தது. ஆனாலும் இவரின் திறமையை பார்த்து அந்த தொடரின் நாயகனாக இவரை அறிவித்த ஐசிசி தங்கபேட்டை பரிசாக வழங்கியது மறக்கவே முடியாது.

Advertisement