IND vs AUS : 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் முகமது ஷமி ஏன் இடம்பெறவில்லை – ரோஹித் கொடுத்த விளக்கம்

Rohit-and-Shami
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் மூன்றாவது முக்கியமான டெஸ்ட் போட்டியானது இன்று இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளின் முடிவில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த மூன்றாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Rohit-Toss

- Advertisement -

ஏனெனில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றுவதோடு சேர்த்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் உறுதிப்படுத்திக் கொள்ளும். இதன் காரணமாக இந்த போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியின் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இரண்டாவது போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. இந்நிலையில் இன்று துவங்கிய இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

Shami 1

இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது ஷமி இப்படி திடீரென அணியில் இருந்து ஏன் நீக்கப்பட்டார் என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா டாசுக்கு பிறகு தெளிவான விளக்கத்தை அளித்தார். அதன்படி ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

முகமது ஷமி அணியில் இருந்து வெளியேற்றப்பட்டது ஓய்வுக்காக மட்டுமே. அவரது பணிச்சுமையை குறைப்பதற்காகவே நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம். முகமது ஷமி அண்மையில் நடைபெற்ற முடிந்த இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் பங்கேற்று விளையாடினார். அதனை தொடர்ந்து தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : 3 ஆவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் – 2 மாற்றத்தை அறிவித்த ரோஹித் சர்மா

எனவே அவரது பணிச்சுமையை கருத்தில் கொண்டு தான் இந்த ஓய்வை அளித்துள்ளதாக ரோகித் சர்மா கூறியுள்ளார். இப்படி முகமது ஷமிக்கு ஓய்வு கொடுக்கப்படுவதால் அவரது இடத்தில் உமேஷ் யாதவ் களமிறங்கி விளையாடுவார் என்றும் ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement