இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த தொடரில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியை நோக்கியும் ஒரு கால் வைத்துள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது இன்று இந்தூர் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இந்திய அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். அதன்படி தற்போது இந்திய அணியானது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
அதனை தொடர்ந்து இந்த 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா? என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் தொடர்ந்து சொதப்பி வரும் துவக்க வீரரான கே.எல் ராகுல் வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோன்று மற்றொரு மாற்றமாக வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி வெளியேற்றப்பட்டு அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார். அவர்கள் இருவரை தவிர்த்து அணியில் வேறுயெந்த மாற்றமும் இல்லை. அதன்படி மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :
1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) புஜாரா, 4) விராட் கோலி, 5) ஷ்ரேயாஸ் ஐயர், 6) கே.எஸ் பரத், 7) ரவீந்திர ஜடேஜா, 8) அக்சர் படேல், 9) அஷ்வின், 10) உமேஷ் யாதவ், 11) முகமது சிராஜ்.
இதையும் படிங்க : டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 வெவ்வேறு நாடுகளுக்காக விளையாடிய 6 வீரர்களின் பட்டியல்
கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது தந்தையை இழந்த உமேஷ் யாதவ் இந்த 3 ஆவது போட்டிக்கான அணியில் இணைய மாட்டார் என்று எதிர்பார்த்த வேளையில் இன்றைய 3 ஆவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் இணைந்தது மட்டுமின்றி பிளேயிங் லெவனிலும் அவர் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



