வாஷிங்க்டன் சுந்தரை 19-ஆவது ஓவரை வீச அழைத்து ஏன்? போட்டி முடிந்து தெளிவான விளக்கம் கொடுத்த – ரோஹித் சர்மா

Rohit-and-Sundar
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே நேற்று மொஹாலி நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. மேலும் இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்களின் செயல்பாடும் மிகவும் திருப்தியாக இருந்ததை பார்க்க முடிந்தது.

இந்த போட்டியின் போது டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக முகமது நபி 42 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டை மட்டும் இழந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி முதலில் பந்துவீசுகையில் இந்திய அணி சார்பாக 6 பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தப்பட்டனர்.

அதிலும் குறிப்பாக இந்த போட்டியின் போது 19-ஆவது ஓவரை தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரை அழைத்து ரோகித் சர்மா வீச வைத்தது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து இருந்தது. ஏனெனில் பொதுவாகவே சுழற்பந்து வீச்சாளர்கள் போட்டியின் இறுதி கட்டத்தில் பந்து வீசமாட்டார்கள்.

- Advertisement -

ஆனால் ரோகித் சர்மாவோ கடைசி கட்டத்தில் வாஷிங்டன் சுந்தரை தைரியமாக அழைத்து பந்துவீச சொன்னார். இந்நிலையில் போட்டி முடிந்து வாஷிங்க்டன் சுந்தருக்கு ஏன் 19-ஆவது ஓவரை வீச கொடுத்தேன் என்பது குறித்தும் கேப்டன் ரோகித் சர்மா தெளிவான விளக்கம் ஒன்றினைக் கொடுத்துள்ளார். அந்தவகையில் ரோஹித் கூறியதாவது : வெவ்வேறு சூழ்நிலையில் நமது அணியின் பவுலர்களை பயன்படுத்தி பார்க்க விரும்புகிறேன். அந்த வகையில் தான் இன்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தருக்கு 19-வது ஓவரை வீச வழங்கினேன்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா – விராட் கோலியை கெடுத்து விட்றாதீங்க.. ராகுல் டிராவிட் ஐடியாவுக்கு ரெய்னா எதிர்ப்பு

ஏனெனில் நாம் எப்பொழுதுமே சாதகமான இடத்தில் இருந்து செயல்படுவதை விட சற்று பவுலர்களுக்கு சவாலான இடங்களில் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தால் தான் அவர்களிடம் இருந்து முழு திறன் வெளிப்படும். அதனை பரிசோதித்து பார்க்கவே நான் வாஷிங்டன் சுந்தரை இறுதி கட்டத்தில் பத்துவீச வாய்ப்பு கொடுத்தேன். அவரும் சிறப்பாக பந்து வீசியதாக ரோகித் சர்மா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement