இவ்ளோ ரன் அடிச்சா போதும்.. யார வேணா தோக்கடிக்கலாம்.. – இலங்கை அணிக்கெதிரான போட்டிக்கு பிறகு ரோஹித் பேட்டி

Rohit
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 33-வது லீக் போட்டியானது இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், குசால் மெண்டிஸ் தலைமையிலான இலங்கை அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இலங்கை அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி இலங்கை அணியின் பந்துவீச்சை சிதறடித்து 50 ஓவர்களில் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 357 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக சுப்மன் கில் 92 ரன்களையும், விராட் கோலி 88 ரன்களையும், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 358 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை அணி 55 ரன்களுக்குள் சுருண்டதால் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெற்றதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

ஒரு அணியாக நாங்கள் இந்த தொடரில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். சென்னை மைதானத்தில் நாங்கள் முதல் வெற்றியை பெற்றபோது எங்களுடைய இலக்கு முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெறுவதுதான் என்பதை கருத்தில் கொண்டு விளையாடி வந்தோம். அந்த வகையில் தற்போது ஏழு போட்டியிலும் வெற்றி பெற்று இந்த இடத்தில் நிற்பது மிகவும் மகிழ்ச்சி. அணியில் உள்ள அனைத்து வீரர்களுமே தங்களது பங்களிப்பை சிறப்பாக வழங்கி வருகின்றனர்.

- Advertisement -

இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்களை குவித்து விட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எந்த ஒரு மைதானத்திலுமே 350 ரன்கள் அடித்தால் அது வெற்றிக்கான ரண்களாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் தெளிவாக விளையாடினார். அவரை நான் நீண்ட நாட்களாகவே பார்த்து வருகிறேன் அவர் இது போன்ற பெரிய இன்னிங்சை விளையாடக்கூடியவர் தான்.

இதையும் படிங்க : லெஜெண்ட்ஸ் ஜஹீர் கான், கும்ப்ளேவை மிஞ்சிய பும்ரா.. உ.கோ வரலாற்றில் தனித்துமான சாதனை

அந்த வகையில் இன்று அவருடைய திறனை அவர் வெளியே காட்டியதாக நினைக்கிறேன். அதே போன்று பந்துவீச்சில் சிராஜ் ஒரு குவாலிட்டியான பவுலர் அவரிடம் புது பந்தை தந்து இதே போன்று சிறப்பாக வீசினால் எங்களது அணி வேறு விதமாக தெரியும். அந்த அளவிற்கு அவர் சிறப்பாக பந்து வீசக்கூடியவர். எங்களுடைய இந்த சிறப்பான ஆட்டத்தை இனிவரும் போட்டிகளிலும் தந்து முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு செல்வோம் என ரோகித் சர்மா மகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement