லெஜெண்ட்ஸ் ஜஹீர் கான், கும்ப்ளேவை மிஞ்சிய பும்ரா.. உ.கோ வரலாற்றில் தனித்துமான சாதனை

Jasprit Bumrah 2
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் இலங்கையை தெறிக்க விட்ட இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி 88, சுப்மன் கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்த உதவியுடன் 358 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதை தொடர்ந்து சேசிங் செய்த இலங்கை முதல் பந்திலிருந்தே இந்தியாவின் தரமான பந்து வீச்சுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்து உலக கோப்பையிலிருந்து லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

தனித்துவமான பும்ரா:
அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் அனைவரும் ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுத்தார். மறுபுறம் இமாலய வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் படித்து செமி ஃபைனலுக்கும் முதல் அணியாக தகுதி பெற்ற இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது ஷமி 5, முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இப்போட்டியில் 5 ஓவரில் 1 மெய்டன் உட்பட 8 ரன்கள் மட்டும் கொடுத்து 1 விக்கெட் எடுத்த பும்ரா உலகக்கோப்பையில் தொடர்ந்து அதிக போட்டிகளில் குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனை படைத்துள்ளார்.

அதாவது 2019 உலகக்கோப்பையில் முதல் முறையாக விளையாடிய பும்ரா பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 1 விக்கெட் கூட எடுக்கவில்லை. அதன் பின் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெற்ற போட்டிகளில் தொடர்ச்சியாக ஒரு விக்கெட் எடுத்த அவர் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா தோல்வியை சந்தித்த செமி ஃபைனலிலும் குறைந்தது 1 விக்கெட்டை எடுத்திருந்தார்.

- Advertisement -

அதைத்தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டியில் குறைந்தது 1 விக்கெட் எடுத்த பும்ரா இப்போட்டியிலும் 1 விக்கெட்டை எடுத்துள்ளார். அந்த வகையில் உலகக்கோப்பையில் கடைசியாக விளையாடிய 13 போட்டிகளில் தொடர்ச்சியாக ரயில் போல குறைந்தது 1 விக்கெட்டை பும்ரா எடுத்துள்ளார்.

இதையும் படிங்க: இலங்கைக்கு எதிராக சம்பவம் செய்த இந்தியா.. பாகிஸ்தானை முந்தி புதிய தனித்துவ உலக சாதனை

இதன் வாயிலாக உலகக் கோப்பை வரலாற்றில் தொடர்ந்து அதிக போட்டிகளில் குறைந்தது 1 விக்கெட்டை எடுத்த இந்திய பவுலர் என்ற தனித்துவமான சாதனையை ஜஸ்பிரித் பும்ரா படைத்துள்ளார். இதற்கு முன் கடந்த 2007, 2011 உலகக் கோப்பைகளில் ஜாம்பவான் ஜாகிர் கான் இதே போல தொடர்ச்சியாக 12 போட்டிகளில் குறைந்தது 1 விக்கெட்டை எடுத்ததே முந்தைய சாதனையாகும். அவருக்கு அடுத்தபடியாக 1996, 1996 ஆகிய உலகக் கோப்பைகளில் அனில் கும்ப்ளே இதே போல தொடர்ச்சியாக 11 போட்டிகளில் குறைந்தது ஒரு விக்கெட்டை எடுத்து தற்போது இப்பட்டியலில் 3வது இடத்தில் இருக்கிறார்.

Advertisement