இலங்கைக்கு எதிராக சம்பவம் செய்த இந்தியா.. பாகிஸ்தானை முந்தி புதிய தனித்துவ உலக சாதனை

IND vs SL 2
Advertisement

ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 தொடரில் நவம்பர் 2ஆம் தேதி மும்பையில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 33வது லீக் போட்டியில் இலங்கையை 302 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது மிரட்டல் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 357/8 ரன்கள் குவித்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்தது.

அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 88, சுப்மன் கில் 92, ஸ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்த நிலையில் இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 5 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத் தொடர்ந்து 358 ரன்களை துரத்திய இலங்கை முதல் பந்திலிருந்தே அனலாக செயல்பட்ட இந்தியாவுக்கு எதிராக தாக்குப் பிடிக்க முடியாமல் சீட்டுக்கட்டு போல சரிந்து 19.4 ஓவரில் 55 ரன்களுக்கு சுருண்டு படுதோல்வியை சந்தித்தது.

- Advertisement -

சதமே அடிக்காமல்:
அந்த அணிக்கு அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 14 ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக முகமது சாமி 5 முகமது சிராஜ் நான்கு விக்கெட்டுகளை சாய்த்தனர். அந்த வகையில் 2023 ஆசிய கோப்பை பைனல் போல தோல்வியை சந்தித்த இலங்கை லீக் சுற்றுடன் வெளியேறியது. மறுபுறம் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தங்களுடைய மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்து சாதனை படைத்தது.

அத்துடன் இதுவரை பங்கேற்ற 7 போட்டிகளிலும் 7 வெற்றிகளை பெற்ற இந்தியா புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி செமி ஃபைனலுக்கு முதல் அணியாகவும் தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. அதனால் இம்முறை நிச்சயம் 2011 போல இந்தியா சொந்த மண்ணில் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

முன்னதாக இதே வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 2011 உலகக்கோப்பை ஃபைனலில் மோதிய போது இலங்கையை தோற்கடித்த கோப்பையை வென்று சரித்திரம் படைத்ததை மறக்க முடியாது. அந்த வகையில் இப்போட்டியிலும் இலங்கையை வெளுத்து வாங்கிய இந்தியாவுக்கு கில் 92, விராட் 88, ஸ்ரேயாஸ் 82 என் 3 பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் விளாசி சதமடிக்காமலேயே 357/8 என்ற பெரிய ஸ்கோர் குவிக்க உதவினார்கள்.

இதையும் படிங்க: ஜாஹீர் கானை முந்தி புதிய வரலாறு.. மிட்சேல் ஸ்டார்க்கையும் ஓரம்கட்டிய ஷமி புதிய மாஸ் உலக சாதனை

சொல்லப்போனால் இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமலேயே அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் தனித்துவ சாதனையை உடைத்துள்ள இந்தியா புதிய உலக சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2019 உலகக்கோப்பையில் நாட்டிங்கம் நகரில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் கூட அடிக்காமல் பாகிஸ்தான் 348/8 ரன்கள் குவித்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement