IND vs SL : மேட்ச் ஜெயிச்சிருந்தாலும் நாங்க இப்படி பண்ணியிருக்க கூடாது – வெற்றிக்கு பின் ரோஹித் பேசியது என்ன?

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று கவுகாத்தி மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்கள் எடுத்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 113 ரன்களையும், கேப்டன் ரோகித் சர்மா 83 ரன்களையும், சுப்மன் கில் 70 ரன்களையும் குவித்து அசத்தினர்.

INDvsSL

- Advertisement -

பின்னர் 374 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இலங்கை கிரிக்கெட் அணியானது 50 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட்டுகளை இழந்து 306 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக 67 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி இந்த முதல் ஒருநாள் போட்டியில் வெற்றியை ருசித்தது.’

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியின் வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் “: இந்த போட்டியில் நாங்கள் மிகச் சிறப்பாக பேட்டிங்கை துவங்கினோம் அனைத்து பேட்ஸ்மன்களுமே சிறப்பாக பேட்டிங் செய்ததால் பெரிய ஸ்கோருக்கு செல்ல முடிந்தது.

Kohli

நாங்கள் இந்த போட்டியில் வெற்றி பெற்றிருந்தாலும் இன்னும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும். இவ்வளவு தூரம் போட்டியை கொண்டு சென்றிருக்கக் கூடாது. இருந்தாலும் இந்த மைதானத்தில் விளக்கிற்கு மத்தியில் பந்து வீசுவது எளிதான ஒன்று கிடையாது.

- Advertisement -

அந்த வகையில் அனைவரும் சிறப்பாக பந்து வீசினார்கள் என்றாலும் போட்டி இவ்வளவு தூரம் கொண்டு சென்றிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். ஒரு அணியாக அனைவருமே இணைந்து விளையாடினால் எப்போதுமே நல்ல முடிவு கிடைக்கும் என்று கேப்டன் ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : வேகத்தில் சாதிக்க பிறந்த உம்ரான் மாலிக், தனது சொந்த சாதனையை உடைத்து ஒருநாள் கிரிக்கெட்டிலும் புதிய வரலாற்று சாதனை

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இந்த 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியானது கொல்கத்தா மைதானத்தில் நாளை ஜனவரி 12-ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement