IND vs RSA : முதல் போட்டியில் நாங்கள் பெற்ற இந்த அசத்தலான வெற்றிக்கு இதுவே காரணம் – ரோஹித் மகிழ்ச்சி

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை மட்டுமே குவித்தது. அந்த அணி சார்பாக கேசவ் மகாராஜா அதிகபட்சமாக 41 ரன்கள் குவித்தார்.

KL Rahul Suryakumar Yadav IND vs RSA

- Advertisement -

அதனை தொடர்ந்து 107 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது துவக்கத்திலேயே ரோஹித் மற்றும் கோலி ஆகியோரது விக்கெட்டை இழந்தாலும் 16.4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 110 ரன்கள் குவித்து எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ராகுல் ஆட்டம் இழக்காமல் 51 ரன்களையும், சூரியகுமார் யாதவ் 50 ரன்களையும் குவித்தனர்.

இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

Arshdeep Singh

இந்த மைதானம் சவாலான ஒன்றாக இருந்தது. இது போன்ற போட்டிகளில் விளையாடும் போது நிறைய நாம் கற்றுக் கொள்ளலாம். அதோடு அணிக்கு இதுபோன்ற சவாலான மைதானங்களில், சவாலான சூழ்நிலைகளில் என்ன தேவை என்பதையும் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இந்த போட்டி அமைந்தது. இருந்தாலும் இந்த போட்டி இரு அணிகளுக்குமே ஒரு அருமையான போட்டி என்று கருதுகிறேன்.

- Advertisement -

போட்டியின் ஆரம்பத்திலேயே மைதானத்தில் இருந்த புற்களால் பவுலர்களுக்கு கண்டிப்பாக ஹெல்ப் கிடைக்கும் என்று நினைத்தேன். அதன்படி மிகச் சிறப்பாக பந்துவீசிய இந்திய பவுலர்கள் பவர்பிளே ஓவர்களிலேயே ஐந்து விக்கெட்டை வீழ்த்தியது வெற்றிக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் அதிக எடையுடன் விளையாடிய டாப் 10 வீரர்கள் – சுவாரஸ்யமான பதிவு

தீபக் சாகர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் வேகப்பந்து வீச்சுக்கு ஹெல்ப் கிடைக்கும் இந்த மைதானத்தில் எவ்வாறு பந்து வீச வேண்டுமோ அதே போன்று சரியான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இது போன்ற மைதானங்களுக்கு உகந்த மரியாதை கொடுத்து விளையாட வேண்டும். சேசிங்கின் போது அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தாலும் ராகுல் மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது என ரோஹித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement