MI vs RR : பொல்லார்டு மாதிரி இவர்கிட்ட பவர் இருக்கு. ராஜஸ்தான் அணிக்கெதிரான வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேட்டி

Rohit Sharma
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 42-வது லீக் போட்டியானது நேற்று இரவு மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சி சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

MI vs RR

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய ராஜஸ்தான அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்களை குவித்தது. ராஜஸ்தான் அணி சார்பாக அந்த அணியின் துவக்க வீரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 124 ரன்கள் குவித்தார்.

பின்னர் 213 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 214 ரன்கள் குவித்து ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. மும்பை அணி சார்பாக சூர்யகுமார் யாதவ் 55 ரன்களையும், டிம் டேவிட் ஆட்டமிழக்காமல் 45 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்தப் போட்டி முடிந்து தங்களது அணி பெற்ற வெற்றி குறித்து பேசிய மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

Tim David

இந்த சேசிங்கை பார்த்ததில் மிக அற்புதமாக இருந்தது. கடைசி போட்டியில் இதே போன்று இலக்கை துரத்துகையில் சின்ன இடைவெளியில் அந்த போட்டியை தவற விட்டோம். ஆனால் தற்போது மீண்டும் வெற்றி பெற்றுள்ளதில் மகிழ்ச்சி. எங்களுடைய திறனை நாங்கள் மீட்டெடுத்துள்ளோம் என்று நினைக்கிறேன்.

- Advertisement -

மும்பை அணியில் பொல்லார்டின் இடத்தை நிரப்புவது மிகப்பெரிய விடயம். பொல்லார்டு பல ஆண்டுகளாக பல சாம்பியன்ஷிப்புகளை பெற்றுத் தந்துள்ளார். ஆனால் அவரது இடத்தில் டிம் டேவிட் விளையாடுவதற்கு நல்ல பவரும், திறனும் அவரிடம் இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு வீரர் பின் வரிசையில் இருக்கும்போது எதிரணியின் பந்துவீச்சாளர்கள் அவருக்கு எதிராக பந்துவீச யோசிப்பார்கள் என்று ரோகித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க : PBKS vs CSK : இது ரொம்ப பெரிய விஷயம். சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு – ஷிகார் தவான் பேசியது என்ன?

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : ஒரு அணியின் கேப்டனாக சூழ்நிலைக்கு ஏற்றவாறு, எதிரணிக்கு ஏற்றவாறு, மைதானத்திற்கு ஏற்றவாறும் வீரர்களை தேர்வு செய்ய வேண்டியுள்ளது. எனவே போட்டிகளில் தன்மைக்கு ஏற்ப வீரர்களை தேர்வு செய்து வருகிறேன் என்றும் சூரியகுமார் யாதவின் ஆட்டமும் இன்று பிரமாதமாக இருந்ததாக ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement