PBKS vs CSK : இது ரொம்ப பெரிய விஷயம். சி.எஸ்.கே அணியை வீழ்த்திய பிறகு – ஷிகார் தவான் பேசியது என்ன?

Dhawan
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 41-வது லீக் போட்டியானது நேற்று மதியம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற சென்னை அணியின் கேப்டன் தோனி முதலில் தங்களது அணி பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார்.

CSK vs PBKS

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 200 ரன்களை குவித்தது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் டேவான் கான்வே 92 ரன்கள் அடித்தார்.

பின்னர் 201 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது போட்டியில் சரியாக 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இதன்மூலம் சென்னை அணியை அதன் சொந்த மைதானத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அசத்தியுள்ளது.

Raza

இந்நிலையில் இந்த போட்டி முடித்து தங்களது அணி பெற்ற இந்த வெற்றி குறித்து பேசிய பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகார் தவான் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மிகவும் ஸ்பெஷலான ஒன்று. ஏனெனில் சென்னை அணியை சென்னை மைதானத்தில் தோற்கடிப்பது என்பது மிகப்பெரிய விடயம். அந்த விடயத்தை நாங்கள் செய்து காட்டி உள்ளோம்.

- Advertisement -

மேலும் எங்களது அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை இந்த போட்டியில் வெளிப்படுத்தினர். டாசை தவிர்த்து நாங்கள் உள்ளே வந்த போது நிச்சயம் வெற்றி பெற வேண்டும் என்ற நல்ல மனநிலையுடன் வந்தோம். எங்கள் அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன்.

இதையும் படிங்க : IPL 2023 : 8 ஓவரில் 106 ரன்கள், இப்டி போட்டா என்ன மாதிரி வரமுடியாது – இளம் இந்திய மற்றும் தெ.ஆ பவுலர்களை விளாசிய அக்ரம்

அதே போன்று பேட்ஸ்மேன்களும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஒரு கேப்டன் என்ற முறையில் நான் நிறைய ஓவர்கள் விளையாட வேண்டும் என நினைக்கிறேன். லிவிங்ஸ்டன் நல்ல டச்சில் உள்ளார். தற்போது எங்களது அணி சிறப்பான இடத்திற்கு வந்துள்ளதாக நினைக்கிறேன் என ஷிகார் தவான் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement