IPL 2023 : 8 ஓவரில் 106 ரன்கள், இப்டி போட்டா என்ன மாதிரி வரமுடியாது – இளம் இந்திய மற்றும் தெ.ஆ பவுலர்களை விளாசிய அக்ரம்

Advertisement

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நிறைய பரபரப்பான நடைபெற்று வரும் நிலையில் ஏப்ரல் 28ஆம் தேதி நடைபெற்ற 38வது லீக் போட்டியில் பஞ்சாப்பை சரமாரியாக அடித்து நொறுக்கிய லக்னோ 20 ஓவர்களில் 257/5 ரன்கள் குவித்தது. அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாகவும் சாதனை படைத்த லக்னோ எதிர்பார்க்கப்பட்டது போலவே பஞ்சாப்பை 56 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் கேஎல் ராகுல் ஆரம்பத்திலேயே அவுட்டானதை பயன்படுத்தி மார்கஸ் ஸ்டோனிஸ் 72 (40) கெய்ல் மேயர்ஸ் 54 (24) நிக்கோலஸ் பூரான் 45 (19) என முக்கிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பெரிய ரன்களை விளாசினர்.

LSG vs PBKS

ஆனால் அவர்கள் அடித்து நொறுக்கும் அளவுக்கு பந்து வீச்சில் கொஞ்சம் கூட சிறப்பாக செயல்படாத பஞ்சாப் அணிக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடும் ககிஸோ ரபாடா 4 ஓவரில் 2 விக்கெட்களை எடுத்தாலும் 52 ரன்களை வாரி வழங்கினார். அவரை மிஞ்சும் வகையில் இந்தியாவுக்காக சமீபத்தில் அறிமுகமாகி நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ள அர்ஷிதீப் சிங் 4 ஓவரில் 1 விக்கெட் எடுத்தாலும் 54 ரன்களை வாரி வழங்கினார்.

- Advertisement -

அக்ரம் அதிருப்தி:
கடந்த போட்டியில் மும்பைக்கு எதிராக அடுத்தடுத்த பந்துகளில் மிடில் ஸ்டம்ப்பை உடைத்து அபாரமான வெற்றியைப் பெற்றுக் கொடுத்த அவர் அதற்கடுத்த இப்போட்டியில் இப்படி மோசமாக செயல்பட்டது இந்திய ரசிகர்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. 2019 முதல் பஞ்சாப் அணியில் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வந்ததால் கடந்த வருடம் அறிமுகமாகி 2022 டி20 உலக கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்த அர்ஷிதீப் சிங் இந்தியாவின் நீண்டகால இடது கை வேகப்பந்து வீச்சாளர் தேடலுக்கு தீர்வாக வந்துள்ளதாகவும் பாகிஸ்தானின் ஜாம்பவான் வாசிம் அக்ரம் போல் செயல்படுவதாகவும் நிறைய ரசிகர்களிடம் சில முன்னாள் வீரர்களும் பாராட்டினர்.

Arshdeep Singh

ஆனால் சமீபத்திய இலங்கை டி20 தொடரில் நோபால்களை போட்டு மோசமான உலக சாதனை படைத்த அவர் இந்த சீசனில் கலவையான செயல்பாடுகளையே வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவத்தை கொண்டிருந்தும் அந்த போட்டியில் அவரும் ரபாடாவும் எதிரணி பேட்ஸ்மேன்கள் அடிக்கிறார்கள் என்று தெரிந்தும் தொடர்ந்து ஃபுல் டாஸ் பந்துகளை வீசி ரன்களை கட்டுப்படுத்துவதற்கு எந்த முயற்சிகளையும் செய்யாதது தமக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக வாசிம் அக்ரம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

- Advertisement -

குறிப்பாக இப்படி செயல்பட்டால் எப்படி தம்மை போல் வர முடியும் என்று அந்த 2 இளம் பவுலர்களின் செயல்பாடுகள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “அதை என்னால் நம்ப முடியவில்லை. எங்களது காலத்தில் 257 ரன்களை வைத்து வென்று விடுவோம். இதைத்தான் நான் பேச விரும்புகிறேன். அதாவது டி20 போட்டிகள் பவுலர்களுக்கு மிகவும் கடினமானது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்”

“ஆனால் இந்த நவீன கிரிக்கெட்டில் நான் விளையாடியிருந்தால் எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னை அடிக்கும் போது அப்போதுள்ள ரன் அப் கோணத்தில் இன்னும் வளைவை அதிகப்படுத்தி அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து வீசுவேன். இப்போதுள்ள வலது கை பவுலர்களில் ட்வயன் ப்ராவோ தவிர்த்து யாரும் அவ்வாறு செயல்படுவதை நான் பார்ப்பதில்லை”

- Advertisement -

“அவர் மட்டுமே அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் நோக்கி யார்கர் பந்துகளை வீசக்கூடியவர். அது தொடர்ச்சியான பயிற்சிகளால் மட்டுமே சாத்தியமாகும். எனவே பேட்ஸ்மேன்கள் அடிக்கும் போது நீங்கள் அரௌண்ட் தி விக்கெட் அல்லது நடுவருக்கு பின்னே இருந்து பந்து வீசலாம். உங்களது வேலை அனைத்தும் பேட்ஸ்மேன்களின் மனதில் சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும். ஆனால் இப்போதுள்ள பவுலர்கள் அதை செய்வதில்லை”

Wasim-Akram

இதையும் படிங்க:IPL 2023 : சிரிப்பதா அழுவதா? அந்த சாதனைய தூக்கி குப்பைல போடுங்க – வெற்றியை தாரை வார்த்த வீரரை விளாசும் சிஎஸ்கே ரசிகர்கள்

“ரபாடா மற்றும் அர்ஷிதீப் ஆகியோர் 8 ஓவர்களில் 106 ரன்கள் கொடுத்தனர். குறிப்பாக நாங்கள் ஃபுல் டாஸ் வீசுகிறோம் நீங்கள் எங்களை சிக்சராக அடியுங்கள் என பேட்ஸ்மேன்களுக்கு அவர்கள் போட்டுக் கொடுத்தது என்னால் நம்ப முடியவில்லை. சில நாட்களில் பந்து வீச்சாளர்கள் அடி வாங்குவார்கள் என்பது எனக்கு தெரியும். ஆனால் இது அடித்து நொறுக்கப்பட்ட நிகழ்வாகும்” என்று கூறினார்.

Advertisement