- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : நான் எடுத்த அந்த முடிவு மிகச்சரியானது. அபார வெற்றிக்கு பிறகு – ரோஹித் சர்மா பேசியது என்ன?

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டி நேற்று லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக தீர்மானம் செய்தார். அதன்படி முதலில் பந்து வீசிய இந்திய அணியானது மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 25.2 ஓவர்களில் இங்கிலாந்து அணியை 110 ரன்களுக்கு சுருட்டியது.

மிகச் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 6 விக்கெட்டுகளையும், ஷமி 3 விக்கெட்டுகளையும், பிரசித் கிருஷ்ணா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி சார்பாக நான்கு வீரர்கள் இந்த போட்டியில் டக் அவுட் ஆகினர். அதிகபட்சமாக அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் 30 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியானது 18.4 ஓவர்களில் விக்கெட் எதுவும் விடாமல் 114 ரன்கள் அடித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 76 ரன்களுடனும், ஷிகர் தவான் 31 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

இந்த ஆட்டத்தில் மைதானத்தின் தன்மை மற்றும் பிட்சின் நிலையை கணிக்கவே நாங்கள் டாசில் வெற்றி பெற்ற பிறகு பந்து வீசுவதாக தீர்மானம் செய்தோம். நான் எடுத்த அந்த முடிவு மிகச் சிறப்பான முடிவாக அமைந்தது. ஏனெனில் இது போன்ற மைதானத்தில் முதலில் பந்துவீசி அந்த மைதானத்தின் தன்மையை கணிப்பது என்று நான் எடுத்த முடிவு மிக சரியான ஒன்றாக அமைந்தது.

- Advertisement -

ஆனாலும் இந்த மைதானத்தில் எவ்வாறு பந்துவீசப் போகிறோம் என்கிற கவலை எங்களிடம் இல்லை. ஏனெனில் இந்திய அணியில் உள்ள பந்துவீச்சாளர்கள் மிகச்சிறப்பாக பந்தினை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவர்கள். போட்டியின் ஆரம்பத்திலேயே பும்ரா மற்றும் ஷமி ஆகியோர் மைதானத்தின் தன்மையை சரியாக கணித்து பந்தினை ஸ்விங் செய்து போட்டியின் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.

இதையும் படிங்க : IND vs ENG : போட்டிக்கு முன்னாடி என்ன சொன்னீங்க. மைக்கல் வாகனை கிண்டலடித்து – கேலி செய்யும் ரசிகர்கள்

எந்த ஒரு இடத்திலும் இங்கிலாந்து அணியை முன்னிலை பெறவிடாமல் எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் இங்கிலாந்து அணியை சொற்ப ரன்களில் சுருட்ட முடிந்தது. மொத்தத்தில் இந்த போட்டியில் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சே வெற்றிக்கு காரணம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by