IND vs ENG : போட்டிக்கு முன்னாடி என்ன சொன்னீங்க. மைக்கல் வாகனை கிண்டலடித்து – கேலி செய்யும் ரசிகர்கள்

Michael-Vaughan and IND Team
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியானது நேற்று லண்டன் கென்னிங்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாசில் வெற்றி பெற்று முதலில் பந்து வீசியது. துவக்கம் முதலே அதிரடியாக பந்து வீசிய இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை எதிர்த்து தாக்குப் பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணியின் வீரர்கள் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

IND vs ENG Jasprit Bumrah

- Advertisement -

குறிப்பாக எப்போதும் இல்லாத அளவிற்கு மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணியானது 26 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன் பின்னரும் எந்த ஒரு பேட்ஸ்மேனாலும் பெரிய அளவில் ரன்களை குவிக்க முடியவில்லை என்கிற காரணத்தினால் 25.2 ஓவர்களை மட்டுமே விளையாடிய இங்கிலாந்து அணியானது 110 ரன்கள் மட்டுமே குவித்து ஆல்அவுட் ஆனது.

பின்னர் 111 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 18.4 ஓவர்களில் விக்கெட் ஏதும் இழக்காமல் 114 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த போட்டியில் கேப்டன் ரோகித் சர்மா 76 ரன்கள், ஷிகர் தவான் 31 ரன்களும் குவித்தனர். இந்த போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் இந்திய அணி இந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Vaughan

இந்நிலையில் இந்த போட்டிக்கு பின்னர் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான மைக்கேல் வாகனை இந்திய ரசிகர்கள் பலரும் சமூக வலைதளத்தின் மூலம் கிண்டல் அடித்து கேலி செய்து வருகின்றனர். அதற்கு முக்கிய காரணம் யாதெனில் இந்த முதலாவது ஒரு நாள் போட்டி துவங்குவதற்கு முன்பாக இந்த ஆட்டம் குறித்து பேசிய அவர் :

- Advertisement -

இங்கிலாந்து அணியில் தற்போது ஜோ ரூட், பேர்ஸ்டோ, ஸ்டோக்ஸ் போன்ற முக்கிய வீரர்கள் இணைந்துள்ளதால் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யும் பட்சத்தில் 400 ரன்களை அடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று தெரிவித்திருந்தார். ஆனால் அவர் கூறியிருந்தபடி அந்த மூவரில் பேர்ஸ்டோ 7 ரன்களை மட்டுமே அடிக்க ரூட் மற்றும் ஸ்டோக்ஸ் ஆகியோர் டக் அவுட்டாகி வெளியேறியிருந்தனர்.

இதையும் படிங்க : சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அவுட்டே ஆகாமல் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் 5 ஜோடிகள்

இப்படி அதிரடியான வீரர்கள் இருப்பதால் இங்கிலாந்து 400 ரன்கள் குவிக்கும் என்று பெரிய அளவில் பில்டப் கொடுத்த வேளையில் நேற்று இங்கிலாந்து அணி 110 ரன்களுக்கு சுருண்டு சொதப்பியதால் மைக்கேல் வாகனை சமூக வலைதளத்தின் மூலம் இந்திய ரசிகர்கள் கேலி செய்தும் கிண்டல் செய்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement