சர்வதேச கிரிக்கெட்டில் ரன் அவுட்டே ஆகாமல் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த டாப் 5 ஜோடிகள்

Raina
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் மோதும் இரு அணிகளில் நாட்டுக்காக வெற்றியைத் தேடிக் கொடுக்க களமிறங்கும் அத்தனை வீரர்களும் தங்களது முழு திறமையை வெளிப்படுத்தி போராடுவார்கள். அதில் நான்கைந்து வீரர்கள் சேர்ந்து சிறப்பாக செயல்படும் அணிக்கே வெற்றியும் தாமாக வந்து சேரும். குறிப்பாக பேட்டிங்கில் ஒரு அணி வெற்றி பெறுவதற்கு குறைந்தது ஒரு பேட்ஸ்மேன் சதம் உட்பட பெரிய ரன்களை அடிப்பதும் அவருக்கு உறுதுணையாக சில வீரர்கள் அரைசதங்கள் போன்ற ரன்களையும் அடிப்பதும் கடைசியில் களமிறங்கும் வீரர்கள் அதை பினிஷிங் செய்யும் வகையில் அதிரடியாக ரன்களை அடிப்பதும் அவசியமான ஒன்றாகும்.

அந்த வகையில் எந்த ஒரு போட்டியிலும் ஒரு அணி பெரிய ரன்களை குவிப்பதற்கு டாப் ஆர்டர் முதல் மிடில் ஆர்டர் வரை ஏதேனும் 2 பேட்ஸ்மேன்கள் பார்ட்னர்ஷிப் போடுவது இன்றியமையாத ஒன்றாகும். அதிலும் ஆரம்பத்திலேயே ஒருசில விக்கெட்டுகளை இழந்து விட்டால் மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் நங்கூரத்தை போல 2 பேட்ஸ்மேன்கள் ஜோடி சேர்ந்து பொறுப்புடனும் கடைசியில் அதிரடியாகவும் பேட்டிங் செய்தால்தான் தங்களது அணியை மீட்டெடுத்து வெற்றியைப் பெறமுடியும். ஆனால் எதிரணி பவுலர்கள், ரன்ரேட் போன்ற அம்சங்களால் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம் அந்த பேட்ஸ்மேன்களை பெரிய ரன்களை எடுக்க விடாமல் அவுட்டாவதற்கு வழிவகுக்கும்.

- Advertisement -

ரன் அவுட்டாகாத ஜோடிகள்:
அந்த சமயங்களில் 2 பேட்ஸ்மேன்களில் யாரேனும் ஒருவர் போல்ட், கேட்ச், ஸ்டம்பிங், எல்பிடபிள்யூ போன்ற முறைகளில் அவுட்டாவதற்கு மற்றொருவர் பொறுப்பாக முடியாது. ஆனால் ரன் அவுட் முறையில் அவுட்டானால் நிச்சயமாக அந்த 2 பேட்ஸ்மேன்களில் யாரோ ஒருவரின் மீது தவறு இருக்கும். எனவே பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்கும்போது சிங்கிள், டபுள் என்ற எதிரணி மீது அழுத்தத்தை போடும் ரன்களை எடுப்பதற்கு 2 பேட்ஸ்மேன்களிடம் நல்ல புரிதல் தேவைப்படுகிறது. அது போன்ற நல்ல புரிதலுடன் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு முறை கூட ரன் அவுட்டாகாமல் அதிக போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோடிகளைப் பற்றி பார்ப்போம்.

5. விராட் கோலி – சுரேஷ் ரெய்னா 67: நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் ரன் மெஷினாக டாப் ஆர்டரில் வெளுத்து வாங்கும் விராட் கோலியுடன் மிகச்சிறந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக கருதப்படும் சுரேஷ் ரெய்னா இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்காக வென்ற போட்டிகளை ரசிகர்கள் மறந்திருக்க முடியாது.

- Advertisement -

இவர்கள் 3 வகையான கிரிக்கெட்டையும் சேர்த்து 67 முறை பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளனர். ஆனால் அதில் இவர்கள் ஒரு முறை கூட ரன் அவுட்டானது கிடையாது என்பது இவர்களுக்கிடையே இருக்கும் நல்ல புரிதலை காட்டுகிறது.

4. மார்க் பவுச்சர் – ஜேக் காலிஸ் 70: 90களில் இறுதியில் அறிமுகமாகி சர்வதேச கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராகவும் விக்கெட் கீப்பராகவும் போற்றப்படும் இவர்கள் தங்களது மிகச்சிறந்த திறமைகளால் தென் ஆப்பிரிக்காவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்துள்ளார்கள்.

- Advertisement -

அந்த வகையில் பேட்டிங் செய்யும்போது தென் ஆப்பிரிக்காவுக்கு 70 முறை இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்த இவர்கள் அதில் ஒரு முறை கூட ரன் அவுட்டாகாமல் தங்களது அணிக்காக மிகச் சிறப்பாக ஓடிஓடி ரன்களை எடுத்துள்ளார்கள்.

3. டாம் லாதம் – கேன் வில்லியம்சன் 75*: இந்தப் பட்டியலில் தற்சமயத்தில் விளையாடி வரும் ஒரே ஜோடியாக இடம்பிடிக்கும் இவர்கள் இருவருமே டாப் ஆர்டரில் இணைந்து நியூசிலாந்துக்காக எப்போதும் நிறைய வெற்றிகளை பெற்று கொடுத்து வருகின்றனர்.

- Advertisement -

இதில் வரலாற்றில் நியூசிலாந்தின் மிகச்சிறந்த வீரராக போற்றப்படும் கேன் வில்லியம்சன் நவீன கிரிக்கெட்டில் நல்ல தொடக்க வீரராகக் கருதப்படும் டாம் லாதம் உடன் இணைந்து இதுவரை 75* போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார். அதில் இவர்களிடையே நல்ல புரிதல் இருப்பதால் ஒரு முறை கூட ரன் அவுட்டே ஆகாமல் மிகச்சிறந்த பார்ட்னர்களாக வலம் வருகின்றனர்.Amla-1

2. கிரேம் ஸ்மித் – ஹாசிம் அம்லா 117: தென் ஆப்பிரிக்காவின் ஆல்-டைம் சிறந்த கேப்டன் கிரேம் ஸ்மித் ஒரு மிகச்சிறந்த தொடக்க வீரர் என்ற நிலைமையில் அவருடன் 2010 வாக்கில் அற்புதமான தொடக்க வீரராக ஜோடி சேர்ந்த ஹாஷிம் அம்லா நிறைய எதிரணிகளை வெளுத்து வாங்கியுள்ளார்.

இந்த இருவருமே தென் ஆப்பிரிக்காவுக்கு 117 போட்டிகளில் ஒன்றாக இணைந்து பார்ட்னர்ஷிப் போட்டுள்ளார்கள். ஆனால் அந்த பார்ட்னர்ஷிப் போட்டிகளில் ஒரு முறை கூட ரன் அவுட் முறையில் அவுட்டானது கிடையாது.

1. மார்ட்டிம் கப்டில் – ப்ரெண்டன் மெக்கல்லம் 124: நியூசிலாந்தின் 2 மகத்தான தொடக்க வீரர்களாக போற்றப்படும் இந்த ஜோடி 2015 உலக கோப்பை சமயங்களில் தொடக்க வீரர்களாக களமிறங்கி எதிரணிகளை பந்தாடியதை மறக்க முடியாது.

இந்த இருவருமே அதிரடியான பவுண்டரிகளை பறக்க விடக்கூடியவர்கள் என்பதால் அதிகமாக சிங்கிள், டபுள் ரன்களை எடுக்க விரும்பமாட்டார்கள் என்றே கூறலாம். அந்த வகையில் நியூசிலாந்துக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் 124 போட்டிகளில் பார்ட்னர்ஷிப் அமைத்த அவர்கள் ஒருமுறைகூட ரன் அவுட்டானது கிடையாது என்பது அவர்களிடையே இருக்கும் நல்ல புரிதலை காட்டுகிறது.

Advertisement