IND vs BAN : கொஞ்சம் பயமாவும், பதட்டமாவும் தான் இருந்தது. பங்களாதேஷ் அணிக்கெதிரான வெற்றி குறித்து – ரோஹித் சர்மா

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் முக்கியமான ஆட்டம் நேற்று அடிலெயிடு ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்ததால் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக விராட் கோலி 64 ரன்களும், கே.எல் ராகுல் 50 ரன்களும் குவித்தனர்.

Virat Kohli IND vs BAN

- Advertisement -

பின்னர் 185 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பங்களாதேஷ் அணியானது முதல் 7 ஓவர்களில் 66 ரன்கள் என அசத்தலாக ஆட்டத்தை ஆரம்பித்த வேளையில் மழை பெய்ததால் போட்டி 16 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. அதன்படி 16 ஓவர்களில் 151 ரன்கள் அடித்தால் வெற்றி என்று இலக்குடன் விளையாடி வங்காதேச அணியானது 16 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்து ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே தோல்வியை தழுவியது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியின் போது நான் சற்று அமைதியாக இருந்தேன். அதேவேளையில் பதட்டத்துடனும் இருந்தேன். இந்த போட்டி எங்களுக்கு முக்கியமான ஒன்று அதனால் அமைதியாக இருந்து எங்களது திட்டங்களை வெளிப்படுத்த விரும்பினோம். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 10 விக்கெட்டுகளை கையில் வைத்திருந்ததால் போட்டி எப்படி வேண்டுமானாலும் சென்றிருக்கலாம்.

Ravichandra Ashwin Rohit Sharma IND vs BAN

ஆனால் மழை பெய்து பின்னர் மீண்டும் போட்டி ஆரம்பித்தபோது அர்ஷ்தீப் சிங் மீண்டும் எங்களை ஆட்டத்திற்கு கொண்டு வந்தார். எங்களது அணியில் தற்போது பும்ரா இல்லாத வேளையில் அவரது இடத்தை யாராவது ஒருவர் கையில் எடுக்க வேண்டும். அந்த வகையில் அர்ஷ்தீப் சிங் அந்த பொறுப்பை உணர்ந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த 9 மாதங்களாகவே அவர் மிக அற்புதமாக பந்து வீசி வருகிறார்.

- Advertisement -

ஷமி மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரில் அர்ஷ்தீப் சிங்கே கடைசி ஓவர்களை வீச எங்களது முதல் தேர்வாக இருந்து வருகிறார். விராட் கோலி ஆசிய கோப்பை தொடரிலிருந்து வேற லெவலில் பேட்டிங் செய்து வருகிறார். அவருடைய பேட்டிங் திறனில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அதே போன்று கே.எல் ராகுலும் இன்று அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் எப்படிப்பட்ட பிளேயர் அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்கு தெரியும்.

இதையும் படிங்க : 2 வீடியோ : மழைக்கு மத்தியில் அம்பயரை மிரட்டிய சாகிப் – இறுதியில் நிரூபரிடம் பல்ப் வாங்கி பரிதாபம், கலாய்க்கும் ரசிகர்கள்

அதே போன்று இன்றைய போட்டியில் நாம் பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டோம். சரியான சில கேட்ச்கள் அற்புதமாக பிடிக்கப்பட்டன. இது போன்ற முக்கியமான போட்டிகளில் பீல்டிங்கில் சரியாக செயல்படுவது அவசியமான ஒன்று. மேலும் எங்களது அணியின் பீல்டிங் பற்றி எனக்கு எந்த ஒரு சந்தேகமும் கிடையாது என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement