மழைக்கு மத்தியில் அம்பயரை மிரட்டிய சாகிப் – இறுதியில் நிரூபரிடம் பல்ப் வாங்கி பரிதாபம், கலாய்க்கும் ரசிகர்கள்

Shakib Al Hasan
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2022 ஐசிசி டி20 உலக கோப்பையில் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைபெற்ற 35வது லீக் போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்தியா வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை திரில் வெற்றி பெற்றது. அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் களமிறங்கிய இந்தியா முதலில் பேட்டிங் செய்து 20 ஓவரில் 184/6 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்கவீரர் கேஎல் ராகுல் 50 (32) ரன்களும் விராட் கோலி 64* (44) ரன்களும் எடுத்தனர்.

அதை தொடர்ந்து 185 ரன்களை துரத்திய வங்கதேசத்துக்கு பவர்பிளே ஓவர்களில் எரிமலையாக வெடித்த லிட்டன் தாஸ் வெறும் 21 பந்துகளில் அரை சதமடித்து 7 ஓவர்களில் 66/0 என்ற அதிரடியான தொடக்கத்தை கொடுத்தார். அப்போது மழை வந்ததால் டிஎல்எஸ் முறைப்படி வங்கதேசம் 17 ரன்கள் முன்னிலை பெற்றதால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால் அதிர்ஷ்டமாக மழை நின்றதால் 16 ஓவரில் வங்கதேசத்தின் வெற்றிக்கு 151 ரன்கள் தேவை என்ற புதிய இலக்கு உருவாக்கப்பட்டது. அப்போது ஆட்டத்தை துவங்கிய வங்கதேசத்துக்கு 60 (27) ரன்கள் எடுத்து மிரட்டிய லிட்டன் தாஸை ராகுல் ரன் அவுட் செய்து திருப்பு முனையை ஏற்படுத்தினர்.

- Advertisement -

மிரட்டலும் பல்ப்பும்:
ஏனெனில் அதை பயன்படுத்திய இந்தியா அடுத்து வந்த சாகிப் அல் ஹசன் உள்ளிட்ட முக்கிய மடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களை அடுத்தடுத்த ஓவர்களில் சொற்ப ரன்களில் காலி செய்தது. ஆனாலும் கடைசி நேரத்தில் நூருல் ஹொசைன் அதிரடியாக 25* (14) ரன்களும் தஸ்கின் அஹமத் 12* (7) ரன்களும் எடுத்ததால் வெற்றி நெருங்கிய வங்கதேசத்துக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்ட போது 14 ரன்கள் மட்டுமே கொடுத்த அரஷ்தீப் சிங் இந்தியாவை திரில் வெற்றி பெற வைத்தார். இந்த வெற்றியால் இந்தியா அரையிறுதி வாய்ப்பும் உறுதியாகியுள்ளது.

முன்னதாக இப்போட்டியில் 66/0 என்ற நிலையிலிருந்த போது வெற்றி கையில் இருந்ததால் வழக்கம் போல வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் முன்னதாகவே மிகுந்த புன்னகையுடன் கொண்டாடும் வகையில் காணப்பட்டார். ஆனால் மழை நின்ற பின் டக்வோர்த் லீவிஸ் முறைப்படி புதிய இலக்கு உருவாக்கப்பட்ட போது மைதானத்தில் அதிகப்படியான ஈரப்பதம் இருந்ததால் அதில் விளையாட முடியாது என்ற வகையில் நடுவர்களிடம் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதை “டிஎல்எஸ் விதிமுறையை விவாதிக்கிறீர்களா?” என்று ஐசிசி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளது.

- Advertisement -

ஏனெனில் அப்படி தாமதித்தாலோ அல்லது தடை ஏற்படுத்தினாலோ ஏற்கனவே டிஎல்எஸ் விதிமுறைப்படி முன்னிலையில் இருப்பதால் வங்கதேசம் எளிதாக வெல்லும் சூழ்நிலை இருந்தது. மறுபுறம் “என்னப்பா உள்ளூர் கிரிக்கெட்டில் சாக்கு சொல்வது போல சர்வதேச கிரிக்கெட்டில் பேசுகிறாய்” என்ற வகையில் அருகில் இருந்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

ஆனாலும் கராறாக நடந்து கொண்ட நடுவர்கள் போட்டியை நடத்தி முடித்தனர். அப்போது உள்ளூர் கிரிக்கெட்டில் நடுவர்களிடம் கோபமடைந்து ஸ்டம்புகளை எட்டி உதைத்ததால் ஒரு நடுவர் வேலையிலிருந்தே ஓய்வு பெற்றதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் உங்களது கோபம் செல்லுபடியாகாது என்று ஷாகிப் அல் ஹசனை சமூக வலைதளங்களில் கலாய்த்தார்கள்.

அதை விட அந்த சமயத்தில் போட்டி முடிந்ததும் என்ன நடந்தது என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு சரியான பதிலை தெரிவிக்காததால் “அந்த நேரத்தில் வங்கதேசத்தில் ஓடும் ஆறுகளை பற்றி விவாதித்தீர்களா” என்று ஒரு செய்தியாளர் ஷாகிப் அல் ஹசனை நேரடியாக கலாய்த்தார். அவர்களது உரையாடல்கள் பின்வருமாறு.
செய்தியாளர்: “ஷாகிப், உங்களுக்கு அதிர்ஷ்டமில்லை. ஆனால் மழைக்குப்பின் நடுவர்களிடம் நீங்கள் என்ன விவாதித்தீர்கள்?”
ஷாகிப்: எங்களுக்கு ஏதாவது ஆப்சன் இருக்கிறதா?
செய்தியாளர்: “ஆப்சன் இல்லை. ஆனால் நீங்கள் நடுவர்களை சமாதானப்படுத்த முயற்சித்தீர்களா?”

ஷாகிப்: “யாரை சமாதானப்படுத்த வேண்டும்?”
செய்தியாளர்: “நடுவர்கள் மற்றும் ரோகித் சர்மாவை”
ஷாகிப்: “நடுவர்களை என்னால் சமாதானப் படுத்த முடியுமா? ”
செய்தியாளர்: “அப்படியானால் நீங்கள் எதைப் பற்றி விவாதித்தீர்கள். வங்கதேசத்தில் ஓடும் ஆறுகளை பற்றியா?”
ஷாகிப்: “நீங்கள் இப்போது தான் சரியான கேள்வியை கேட்கிறீர்கள். அப்போது நடுவர்கள் 2 கேப்டன்களையும் அழைத்து புதிய இலக்கு மற்றும் விதிமுறைகளை சொன்னார்”
செய்தியாளர்: “நீங்கள் அதை ஏற்றுக் கொண்டீர்களா? ”
ஷாகிப்: “ஆம்”
செய்தியாளர்: “அழகு மிகவும் நன்றி”

Advertisement