ரொம்ப பெருமையா இருக்கு.. நம்ம பசங்க சொன்ன வேலைய சிறப்பா செய்ஞ்சிட்டாங்க – ரோஹித் சர்மா பாராட்டு

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியானது இந்தூர் நகரில் ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி வீழ்த்தி மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் கைப்பற்றியது. அதன்படி நடைபெற்று முடிந்த இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 172 ரன்களை குவித்தது. ஆப்கானிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக குல்புதின் நயிப் 57 ரன்களையும், நஜீபுல்லா 23 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 15.4 ஓவர்களில் 4 விக்கெடுகளை மட்டும் இழந்து 173 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 68 ரன்களையும், ஷிவம் துபே 63 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

உண்மையிலேயே இது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. டி20 கிரிக்கெட்டில் கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கிய என்னுடைய இந்த பயணம் மிக நீண்ட பயணம். இந்த பயணத்தின் ஒவ்வொரு நொடியையும் நான் ரசித்து வருகிறேன். நமது அணியில் உள்ள வீரர்களுக்கு நான் தெளிவான திட்டங்களை வழங்கி இருந்தேன். ஒவ்வொரு வீரரும் செய்ய வேண்டிய பங்கு குறித்து சிறப்பாக தெரியும்.

- Advertisement -

அந்த வகையில் அனைவருமே போட்டியை சிறப்பாக முடித்துக் கொடுத்ததில் பெருமையாக இருக்கிறது. கடந்த சில போட்டிகளாகவே நாங்கள் அனைத்து துறைகளிலும் நன்றாக செயல்பட்டு வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய அணி மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் டி20 என இரண்டிலுமே அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.

இதையும் படிங்க : அந்த சாதனை படைச்சது எனக்கே தெரியல.. சிக்ஸர் அடிச்சாலும் பயமில்ல.. ஆட்டநாயகன் அக்சர் படேல் பேட்டி

அவரிடம் உள்ள திறமைகளை அவர் தொடர்ந்து வெளிக்காட்டி வருகிறார். ஷிவம் துபே ஸ்பின்னர்களுக்கு எதிராக பவர்ஃபுல்லான வீரர். அவரும் தனது வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். இந்த இரண்டு போட்டிகளிலுமே அவர் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளார் என ரோகித் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement