அந்த சாதனை படைச்சது எனக்கே தெரியல.. சிக்ஸர் அடிச்சாலும் பயமில்ல.. ஆட்டநாயகன் அக்சர் படேல் பேட்டி

Axar Patel
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஜனவரி 12ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. முதல் போட்டியிலும் ஏற்கனவே வென்றிருந்த இந்தியா இந்த வெற்றியையும் சேர்த்து 2 – 0* (3) என்ற கணக்கில் இத்தொடரின் கோப்பையை ஆரம்பத்திலேயே வென்று தங்களை தரவரிசையில் நம்பர் ஒன் கிரிக்கெட் அணி என்பதை நிரூபித்துள்ளது. இந்தூரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 173 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குல்பதின் நைப் 57 (35) ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3, ரவி பிஸ்னோய் 2, அக்சர் படேல் 2 விக்கெட்களை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து சேசிங் செய்த இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா 0, விராட் கோலி 29 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்கள்.

- Advertisement -

எனக்கே தெரியல:
ஆனால் மற்றொரு துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 68 (34) ரன்களும் மிடில் ஆர்டரில் கடைசி வரை அவுட்டாகாமல் மிரட்டிய சிவம் துபே 63* (32) ரன்களும் குவித்தனர். அதனால் 15.4 ஓவரிலேயே இலக்கை எட்டி இந்தியா எளிதாக வென்றதால் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கரீம் ஜானத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

இந்த வெற்றிக்கு பவர் பிளே ஓவர்களில் 2 விக்கெட்களை எடுத்து 4.2 என்ற எக்கனாமியில் சிறப்பாக பந்து வீசி முக்கிய பங்காற்றிய அக்சர் படேல் ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த 2 விக்கெட்களையும் சேர்த்து டி20 கிரிக்கெட்டில் 200 விக்கெட்டுகளை எடுத்து அக்சர் படேல் சாதனையும் படைத்தார். இருப்பினும் அது போட்டியின் முடிவில் தொகுப்பாளர் சொல்லி தான் தமக்கே தெரியும் என்று தெரிவிக்கும் அவர் இப்போட்டியில் அசத்திய திட்டத்தை பற்றி பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“200 டி20 விக்கெட்டுகளை எடுத்தேன் என்பது எனக்கே இப்போது தான் தெரியும். ஆனால் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்படுவது தான் முக்கியமாகும். உண்மையாக அடுத்த சில வருடங்களுக்கு பின் நான் எத்தனை விக்கெட்டுகள் எடுத்தேன் என்பது எனக்கே நினைவிருக்காது. இந்த போட்டியில் நான் சற்று மெதுவாக வீசி லென்த்தை மாற்ற முயற்சித்தேன். அதில் தற்போது நான் முன்னேற்றமடைந்துள்ளேன்”

இதையும் படிங்க: 10 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. 173 ரன்ஸ்.. ரோஹித், விராட் உதவி இல்லாமலேயே.. ஆப்கனை தெறிக்க விட்ட இந்திய ஜோடி

“அதனால் பவர் பிளே ஓவர்களில் கூட பந்து வீசும் அளவுக்கு என்னுடைய தன்னம்பிக்கை உயர்ந்துள்ளது. டி20 கிரிக்கெட்டில் நீங்கள் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக பேட்ஸ்மேன்களிடம் சிக்ஸர்களை தயாராக இருக்க வேண்டும். ஏனெனில் அதே பந்தில் உங்களுக்கு கேட்ச்சாக விக்கெட்டும் கிடைக்கலாம். முன்பெல்லாம் பேட்ஸ்மேன்கள் அடித்தால் நான் என்னுடைய திட்டத்தை மாற்றுவேன். ஆனால் இப்போது பேட்ஸ்மேன்கள் எனக்கு எதிராக அடித்தாலும் தைரியமாக ஒரே திட்டத்தை பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.

Advertisement