10 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. 173 ரன்ஸ்.. ரோஹித், விராட் உதவி இல்லாமலேயே.. ஆப்கனை தெறிக்க விட்ட இந்திய ஜோடி

IND vs AFG 22
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலையில் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி இந்தூரில் 7 மணிக்கு நடைபெற்றது. அதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு துவக்க வீரர்கள் ரஹமனுல்லா குர்பாஸ் 14, கேப்டன் இப்ராகிம் ஜாட்ரான் 8 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் 3வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக விளையாடிய குல்பதின் நைப் 5 பவுண்டரி 4 சிக்சருடன் அரை சதமடித்து 57 (35) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனாலும் எதிர்புறம் ஓமர்சாய் 2, முகமது நபி 14, நஜிபுல்லா அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டிய துபே, ஜெய்ஸ்வால்:
அதனால் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு கடைசி நேரத்தில் நஜிபுல்லா ஜாட்ரான் 23 (21) ரன்கள் குவித்தார். அவரை விட கடைசி சில ஓவர்களில் வெளுத்து வாங்கிய கரீம் ஜானத் 20 (10) ரன்களும் முஜீப் உர் ரகுமான் 21 (9) ரன்களும் எடுத்தனர். அதனால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 172 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டான நிலையில் இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3, அக்சர் படேல் 2, ரவி பிஸ்னோய் 2 விக்கெட்களை எடுத்தனர்.

அதைத் தொடர்ந்து 173 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோகித் சர்மா ஆரம்பத்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அடுத்ததாக வந்த விராட் கோலி அதிரடியாக விளையாட முயற்சித்து 5 பவுண்டரியுடன் 29 (16) ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனாலும் எதிர்ப்புறம் இளம் வீரர் ஜெய்ஸ்வால் ஆப்கானிஸ்தான் பவுலர்களை அடித்து நொறுக்கிய நிலையில் அடுத்ததாக வந்த சிவம் துபே தம்முடைய பங்கிற்கு பட்டாசான பேட்டிங்கை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக முகமது நபி வீசிய 10வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவருடன் எதிர்புறம் தம்முடைய பங்கிற்கு அதிரடி காட்டிய ஜெய்ஸ்வால் 3வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்து 5 பவுண்டரி 6 சிக்சருடன் 68 (34) ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது வந்த ஜிதேஷ் சர்மா டக் அவுட்டானாலும் மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் வெளுத்து வாங்கிய சிவம் துபே 5 பவுண்டரி 4 சிக்சருடன் 63* (32) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார்.

இதையும் படிங்க: 10 ஃபோர்ஸ் 10 சிக்ஸ்.. 173 ரன்ஸ்.. ரோஹித், விராட் உதவி இல்லாமலேயே.. ஆப்கனை தெறிக்க விட்ட இந்திய ஜோடி

அதனால் 6 வித்தியாசத்தில் வென்ற இந்தியா 2 – 0* (3) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே இத்தொடரின் கோப்பையை வென்றுள்ளது. குறிப்பாக விராட் மற்றும் ரோஹித் ஆகிய 2 சீனியர்கள் பெரிய ரன்கள் எடுக்காத போதிலும் ஜெய்ஸ்வால், துபே சேர்ந்து 10 ஃபோர்ஸ் 10 சிக்ஸ் தெறிக்க விட்டு ஆப்கானிஸ்தானை தோற்கடித்து இந்தியாவின் நம்பர் ஒன் அணி என்பதை நிரூபிக்க வைத்தனர். அதனால் ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக கரீம் ஜானத் 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை.

Advertisement