ஐ.பி.எல் தொடரை விடுங்க என்னோட கனவே இதுமட்டும் தான். அதை நான் சாதிச்சே தீருவேன் – ரோஹித் உறுதி

Rohith
- Advertisement -

ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் துவங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது அடுத்த இரண்டு மாதங்களுக்கு நடைபெற உள்ளது. இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு சென்று எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இந்த ஐபிஎல் தொடரின் ஒரு சில போட்டிகளில் ரோகித் சர்மா விளையாட மாட்டார் என்றும் அப்படி அவர் விளையாடாத போட்டிகளுக்கு சூரியகுமார் யாதவ் கேப்டனாகவும் செயல்படுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

Rohith

- Advertisement -

இப்படி ரோஹித் சர்மா ஒரு சில போட்டிகளை தவறவிட காரணம் யாதெனில் இந்தியாவில் இந்த ஆண்டு இறுதியில் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரானது நடைபெற உள்ளது. அந்த தொடருக்காக அவர் முழு உடற்தகுதியுடன் இருப்பதற்காகவே இந்த ஓய்வு அவருக்கு அளிக்கப்பட உள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் உலகக் கோப்பை தொடர் குறித்து தற்போது ரோகித் சர்மா மனம் திறந்த பேட்டி ஒன்றினை அளித்துள்ளார். அது குறித்து அவர் கூறுகையில் : இம்முறை உலகக் கோப்பையை சொந்த மண்ணில் விளையாட இருக்கிறோம். ஒவ்வொரு வீரருக்குமே உலக கோப்பையில் விளையாடுவதும், உலக கோப்பையை ஜெயிப்பதும் கனவாக இருக்கும்.

Rohith

அந்த வகையில் இம்முறை இந்தியாவில் நடைபெற இருக்கும் இந்த உலகக் கோப்பை தொடரை நான் ஆர்வத்துடன் எதிர்நோக்கி உள்ளேன். உலகக் கோப்பையை நமது சொந்த மண்ணில் விளையாடுவதோடு மட்டுமின்றி கேப்டனாகவும் நான் இருப்பதினால் எனக்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது.

- Advertisement -

நிச்சயம் இந்த உலகக் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்பதே என்னுடைய கனவு. உலககோப்பை எப்போது தொடங்கும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறேன். இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டு உலக கோப்பையை கைப்பற்றுவதற்கு நமக்கு மிகச் சிறந்த வாய்ப்பு உள்ளது என்று ரோஹித் சர்மா கூறினார்.

இதையும் படிங்க : IPL 2023 : பஞ்சாப்பை பதம் பார்க்கும் உமேஷ் யாதவ் – ப்ராவோ, சுனில் நரேன் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : உலக கோப்பையை துவங்குவதற்கு இன்னும் ஆறு மாத காலம் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு நாளும் எனக்கு அந்த தொடர் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இம்முறை நமது அணி மிகவும் பலமானதாக இருப்பதால் சரியாக வீரர்களை பயன்படுத்தி கோப்பையை கைப்பற்ற நாங்கள் திட்டமிட்டு வருகிறோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement