IPL 2023 : பஞ்சாப்பை பதம் பார்க்கும் உமேஷ் யாதவ் – ப்ராவோ, சுனில் நரேன் ஆல் டைம் சாதனையை உடைத்து புதிய வரலாற்று சாதனை

- Advertisement -

கோலாகலமாக துவங்கியுள்ள 2023 ஐபிஎல் தொடரில் ஏப்ரல் 1ஆம் தேதியன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெற்ற 2வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பஞ்சாப் கிங்ஸ் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்த சீசனை வெற்றியுடன் துவக்கியுள்ளது. மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் அதிரடியாக செயல்பட்டு 191/5 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பனுக்கா ராஜபக்சா 52 (30) ரன்களும் கேப்டன் ஷிகர் தவான் 40 (29) ரன்கள் எடுக்க கொல்கத்தா சார்பில் அதிகபட்சமாக டிம் சௌதீ 2 விக்கெட்டுகள் சாய்த்தார்.

- Advertisement -

அதை தொடர்ந்து 192 ரன்கள் துரத்திய கொல்கத்தாவுக்கு மந்தீப் சிங் 2, அங்குல் ராய் 4, ரிங்கு சிங் 4 என முக்கிய பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக்கி ஏமாற்ற வெங்கடேஷ் ஐயர் 34 (28), கேப்டன் நிதிஷ் ராணா 24 (17), ஆண்ட்ரே ரசல் 35 (19) என நட்சத்திர வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்து நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அதை பெரிய ரன்களாக மாற்றாமல் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 16 ஓவரில் 146/7 என்ற ஸ்கோருடன் அந்த அணி தடுமாறிக் கொண்டிருந்த போது வந்த மழை போட்டியை மொத்தமாக தடுத்து நிறுத்தியது.

உமேஷ் யாதவ் சாதனை:
அப்போது டிஎம்எஸ் விதிமுறைப்படி 7 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த பஞ்சாப் வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். முன்னதாக அந்த போட்டியில் இந்தியாவின் நட்சத்தி சீனியர் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் 50 ரன்கள் விளாசி அச்சுறுத்தலை கொடுத்த பனுக்கா ராஜபக்சாவை அவுட்டாக்கி அசத்தினார். அந்த வகையில் 4 ஓவரில் 27 ரன்களை மட்டும் கொடுத்து 6.75 என்ற எக்கனாமியில் சிறப்பாக பந்து வீசிய அவர் ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக இதுவரை மொத்தம் 34 விக்கெட்களை சாய்த்துள்ளார்.

PBKS vs KKR Umesh

இதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்து வீச்சாளர் என்ற சுனில் நரேன், ட்வயன் ப்ராவோ ஆகியோரின் ஆல் டைம் சாதனையை தகர்த்த அவர் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார். அந்த பட்டியல்:
1. உமேஷ் யாதவ் : 34, விக்கெட்டுகள் – பஞ்சாப் அணிக்கு எதிராக*
2. சுனில் நரேன் : 33 விக்கெட்கள், பஞ்சாப் அணிக்கு எதிராக*
3. ட்வயன் ப்ராவோ : 33 விக்கெட்கள் – மும்பைக்கு எதிராக
4. லசித் மலிங்கா : 31 விக்கெட்கள் – சென்னைக்கு எதிராக
5. புவனேஸ்வர் குமார் : 30 விக்கெட்டுகள் – கொல்கத்தாவுக்கு எதிராக*

- Advertisement -

கடந்த 2010 முதல் ஐபிஎல் தொடரில் டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய அணிகளுக்காக விளையாடி வரும் உமேஷ் யாதவ் பஞ்சாப் அணியை பதம் பார்த்து அந்த அணிக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதற்கு இந்த சாதனை ஒரு மிகச்சிறந்த சான்றாகும். ஆரம்பகாலங்களில் அதிரடியான வேகத்தில் பந்து வீசி அனைவரது பாராட்டுகளை பெற்ற அவர் இந்தியாவுக்காகவும் 3 விதமான கிரிக்கெட்டிலும் அறிமுகமாக நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

Umesh Yadav

குறிப்பாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2015 உலக கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்து வீச்சாளராக சாதனை படைத்த அவர் அதன் பின் ஐபிஎல் தொடரில் ஒரு சில சீசன்களில் ரன்களை வாரி வழங்கினார். மறுபுறம் 2016இல் அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே முதன்மை வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்த ஜஸ்பிரித் பும்ரா வந்ததால் அவருக்கு இந்திய வெள்ளைப் பந்து அணியில் வாய்ப்புகளை பறிபோனது.

இதையும் படிங்க:CSK vs GT : 8 ஆவது வீரராக நான் பேட்டிங் செய்ய களமிறங்க காரணம் இதுதான் – விவரம் இதோ

போதாக்குறைக்கு சிராஜ் போன்ற பவுலர்கள் வந்ததால் டெஸ்ட் அணியிலும் நிலையான வாய்ப்பு கிடைக்காமல் தடுமாறி வரும் அவர் 2022 ஐபிஎல் தொடரில் இதே போல கொல்கத்தா அணியில் மிகச் சிறப்பாக செயல்பட்டு கடந்த அக்டோபர் மாதம் மீண்டும் இந்திய டி20 அணியில் நீண்ட வருடங்களுக்கு கழித்து வாய்ப்பு பெற்றார். அந்த வகையில் இந்த ஐபிஎல் தொடரில் இதே போல சிறப்பாக செயல்பட்டு வரும் அக்டோபர் மாதம் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் விளையாடுவதே தம்முடைய லட்சியம் என்று சமீபத்தில் உமேஷ் யாதவ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement