CSK vs GT : 8 ஆவது வீரராக நான் பேட்டிங் செய்ய களமிறங்க காரணம் இதுதான் – விவரம் இதோ

Dhoni
- Advertisement -

இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது 15 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்த வேளையில் தற்போது நடப்பு 2023-ஆம் ஆண்டிற்கான பதினாறாவது சீசனானது நேற்று அஹமதாபாத் நகரில் துவங்கியது. இந்த தொடரின் முதலாவது போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

csk vs gt

- Advertisement -

நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த முதலாவது போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஹார்டிக் பாண்டியா முதலில் தங்களது அணி பந்துவீசும் என்று அறிவித்தார். அதன்படி முதலில் விளையாடிய சென்னை அணியானது 20 ஓவர்களின் முடிவில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்கள் குவித்தது.

அதனை தொடர்ந்து 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் அணியானது 19.2 ஓவர்களில் 5 விக்கெடுகளை இழந்து 182 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணியை தொடர்ந்து மூன்று முறை அவர்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளனர்.

Dhoni

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்ட தோனி பேட்டிங் செய்யும்போது நாங்கள் இன்னும் நிறைய ரன்களை அடித்திருக்க வேண்டும் என்று நான் வெளிப்படையான கருத்தினை தெரிவித்து இருந்தார். அதோடு அதிரடி ஆட்டக்காரரான அவர் இந்த போட்டியில் எட்டாவது இடத்தில் ஏன் களம் இறங்கினேன் என்பது குறித்த விளக்கத்தையும் அவர் தெளிவாக கூறினார்.

- Advertisement -

அதன்படி நேற்றைய போட்டியில் தான் ஏன் எட்டாவது வீரராக பேட்டிங் செய்ய வந்தேன் என்று கூறுகையில் : போட்டி சென்று கொண்டிருந்த வேகத்தில் இரண்டு இடது கை வீரர்கள் களத்தில் இருந்தால் அது சரியானதாக இருக்கும் என்று நினைத்தேன். அதன் காரணமாகவே எனக்கு முன்னதாக ஷிவம் துபே மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாடினர்.

இதையும் படிங்க : NZ vs SL : கடைசி பந்தில் நியூசிலாந்து சிக்ஸர், டையில் முடித்த இலங்கை – பரபரப்பான சூப்பர் ஓவரில் இலங்கை உலக சாதனை வெற்றி

அதிலும் குறிப்பாக ஷிவம் துபேக்கு அடுத்து ஜடேஜா உள்ளே சென்றால் நன்றாக இருக்கும் என்று கணித்து தான் தனக்கு முன்னதாக அவர் ஜடேஜாவை களமிறக்கிவிட்டு தான் எட்டாவது வீரராக களம் இறங்கினேன் என்று விளக்கம் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement