2019 இருந்த ரோஹித்தா நான் மாறப்போறேன். அடுத்த 2 மாசம் என்னோட டார்கெட் இதுதான் – ரோஹித் சர்மா எடுத்துள்ள அதிரடி முடிவு

Rohit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் சர்மாவின் தோள்களின் மீது தற்போது மிகப்பெரிய பாரம் இருக்கிறது என்றால் அது மிகையல்ல. ஏனெனில் அடுத்தடுத்து ஆசிய கோப்பைத் தொடர், 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் என இருபெரும் தொடர்களை தலைமை தாங்க இருக்கும் ரோகித் சர்மா தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருப்பதால் வெற்றியுடன் விடைபெற விரும்புவார். ஆகஸ்ட் 30-ஆம் தேதி ஆசிய கோப்பை தொடரும், அக்டோபர் 5-ஆம் தேதி உலக கோப்பை தொடரும் துவங்க இருக்கும் வேளையில் இந்த இரண்டு தொடர்களையும் குறி வைத்து தற்போதைய ரோகித் தனது பயிற்சியினை எடுக்க ஆரம்பித்து விட்டார்.

தற்போது பெங்களூருவில் பயிற்சி ஈடுபட்டு வரும் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டி ஒன்றில் : எதிர்வரும் அடுத்த இரண்டு மாதங்கள் எப்படி இருக்க போகிறது? என்பது குறித்த தகவலை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : தற்போதைக்கு நான் என்னுடைய மனரீதியாக அமைதியாக எதைப் பற்றி யோசிக்காமல் பாசிட்டிவாக இருக்க முயற்சித்து வருகிறேன்.

- Advertisement -

அதோடு எதிர்வரும் உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக நான் 2019-ஆம் ஆண்டு எந்த மனநிலையில் இருந்தேனோ அதேபோன்று இருக்க விரும்புகிறேன். ஏனெனில் 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரின் போது நான் நல்ல ஷேப்பிலும் நல்ல மனநிலையிலும் இருந்தேன். அதனால் என்னால் அந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது. எனவே அந்த நினைவுகளை எல்லாம் வெளிக்கொணர்ந்து தற்போது அந்த மைன்ட் செட்டிற்கு நான் மாற விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் கூறுகையில் : ஒரு போட்டியின் முடிவோ அல்லது ஒரு சாம்பியன்ஷிப்போ ஒரு வீரரை முற்றிலுமாக மாற்றி விடாது. ஏனெனில் 16 ஆண்டுகளாக நான் எப்படி இருக்கிறேனோ அதேபோன்றுதான் இப்போதும் ஒரு தனிப்பட்ட நபராக இருந்து வருகிறேன்.

- Advertisement -

ஆனால் அடுத்த இரண்டு மாதங்களுக்கு நான் என்னுடைய மைன்ட் செட்டை மாற்றப் போவது யாதனில் : என்னுடைய அணிக்காக நான் அடுத்தடுத்து இரண்டு கோப்பைகளை குறி வைத்துள்ளேன். அதை நோக்கி தான் என்னுடைய மனநிலை மாற்றம் இருக்கும். அந்த இரண்டு கோப்பைகளையும் நான் கைப்பற்ற விரும்புகிறேன் என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசிய கோப்பை 2023 : போன டைம் என்ன நடந்துச்சுன்னு மறந்துடாதீங்க – இந்தியாவை ஓப்பனாக எச்சரித்த வாசிம் அக்ரம்

இதன் மூலம் அவர் ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை தொடர் ஆகியவற்றை டார்கெட் செய்துள்ளார் என்று தெளிவாக தெரிகிறது. 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் 5 சதங்களுடன் 648 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் ரோஹித் மீண்டும் அதே மனநிலைக்கு மாற விரும்புகிறேன் என்று கூறியுள்ளதால் கட்டாயம் இந்த உலகக் கோப்பை தொடரிலும் அவரது ஆட்டம் அதிரடியாக இருக்கப் போகிறது என்பது உறுதி.

Advertisement