டி20 உலககோப்பையில் உம்ரான் மாலிக் இடம்பெறுவாரா? மிகப்பெரிய ஹின்ட் கொடுத்த – கேப்டன் ரோஹித் சர்மா

Rohit-and-Umran
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 15-வது ஐபிஎல் தொடரில் தனது வேகத்தினால் அசத்திய ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசும் இவரது திறனை சன்ரைசர்ஸ் அணி சரியாக பயன்படுத்தி அனைத்து போட்டிகளிலும் விளையாடும் வாய்ப்பையும் கொடுத்தது. அப்படி தனக்கு கிடைத்த வாய்ப்பினை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட உம்ரான் மாலிக் ஐபிஎல் தொடரில் அற்புதமான பந்துவீச்சினை வெளிப்படுத்தி இருந்தார். இதன் காரணமாக அவருக்கு இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்த வேளையில் தேர்வு குழுவினரும் அவரை தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இடம்பெற வைத்தது.

Umran Malik Pace

- Advertisement -

ஆனால் அந்த தொடரில் அவருக்கு அறிமுக வாய்ப்பை வழங்கவில்லை என்றாலும் அதற்கு அடுத்து நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் கொண்ட அயர்லாந்து அணிக்கு எதிரான தொடரில் உம்ரான் மாலிக்கிற்கு அறிமுகம் வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த அயர்லாந்துக்கு எதிரான தொடரில் அவர் பெரிய அளவில் விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை என்றாலும் தனது வேகத்தால் மிகச் சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். இந்நிலையில் இவ்வளவு அதிவேகம் கொண்ட ஒரு பந்து வீச்சாளரை உலக கோப்பையில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா நாட்டில் நடைபெற இருக்கும் உலக கோப்பை தொடரில் அவர் விளையாட வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. இந்நிலையில் இன்று இங்கிலாந்து அணிக்கு எதிராக துவங்க உள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உம்ரான் மாலிக் உலகக் கோப்பையில் விளையாடுவாரா? மாட்டாரா? என்பது குறித்தும் அவர் உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவாரா என்பது குறித்தும் தனது விளக்கத்தை அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Umran Malik

உம்ரான் மாலிக் தற்போது தான் இந்திய அணிக்காக அறிமுகமாகியுள்ளார். அவர் இன்னும் பல போட்டிகளில் வெவ்வேறு அணியை எதிர்த்து விளையாட வேண்டும் தொடர்ச்சியாக அவர் சில போட்டிகளில் விளையாடிய பின்பு தான் இந்திய அணி நிர்வாகமும் அவரை டி20 உலக கோப்பை அணியில் இணைக்கலாமா, வேண்டாமா என்று யோசிக்கும். ஆனால் என்னை பொறுத்தவரை நிச்சயம் உம்ரான் மாலிக் எங்களது திட்டங்களில் உள்ளார். தற்போதைக்கு அவர் இந்திய அணியில் என்ன தேவையோ அதனை புரிந்துகொண்டு செயல்பட தயாராக இருக்க வேண்டும்.

- Advertisement -

மேலும் சூழ்நிலைகளை புரிந்து கொண்டு எந்த இடத்தில் எவ்வாறு பந்து பேச வேண்டும் என்பதையும் கற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் : நிச்சயம் உம்ரான் மாலிக் போன்ற திறமையான வீரர்களை நாங்கள் இன்னும் பல போட்டிகளில் விளையாட வாய்ப்பு கொடுத்து அணி வீரர்களுடன் ஒன்றாக இருக்க வைப்போம். உம்ரான் மாலிக் ஒரு அற்புதமான டேலண்ட் உடைய பவுலர் என்றும் ரோகித் சர்மா கூறினார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டியில் நடந்தது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் நடக்காது – ரோஹித் சர்மா ஓபன்டாக்

ஐபிஎல் தொடரில் அவர் எவ்வாறு பந்து வீசினார் என்பதை நாம் அனைவரும் பார்ப்போம். அவரால் மிகப்பெரிய அளவில் மிக அதிக வேகத்துடன் பந்துகளை வீச முடியும். அது மட்டும் தான் அவருடைய ரோல் ஆனாலும் ஐ.பி.எல் போட்டிகளை காட்டிலும் சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாடும் போது சூழல் வேறு மாதிரி இருக்கும். எனவே அனைத்தையும் அவர் கற்றுக்கொண்டு ஃபிட்டாக இருக்க வேண்டியது அவசியம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement