டெஸ்ட் போட்டியில் நடந்தது டி20 மற்றும் ஒருநாள் தொடரில் நடக்காது – ரோஹித் சர்மா ஓபன்டாக்

Rohith
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முடிந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியானது 7 வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்தது. இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா இங்கிலாந்து பயணம் மேற்கொண்டு பயிற்சி போட்டியில் விளையாடிய போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Joe Root Jonny Bairstow Rishabh Pant IND vs ENg

அதன் காரணமாக இறுதி நேரத்தில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வாய்ப்பை ரோஹித் சர்மா தவறவிட்டார். அதனால் புதிய டெஸ்ட் கேப்டனாக ஜஸ்பிரீத் பும்ரா நியமிக்கப்பட்டார். அதன்படி பும்ரா தலைமையில் விளையாடிய இந்திய அணி இந்த தோல்வியை சந்தித்துள்ளது.

- Advertisement -

கடந்த 2007 ஆம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதற்கு அடுத்து கடந்த ஆண்டு துவங்கிய இந்த டெஸ்ட் தொடரின் முதல் பாதியில் கோலியின் தலைமையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் நல்ல முன்னிலையில் இருந்து.

Rohit-Sharma-IND-Captain

இதனால் எளிதாக இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் இறுதி போட்டியில் ஏற்பட்ட தோல்வி காரணமாக இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமனடைந்தது. இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி பெற்ற தோல்வி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

- Advertisement -

உண்மையிலேயே இந்த போட்டியில் இந்திய அணிக்கு கிடைத்த தோல்வி மிகவும் வருத்தம் அளிக்கிறது. எங்களது வீரர்கள் மிகச் சிறப்பான வீரர்கள் தான் ஆனாலும் அவர்களிடம் இருந்து இந்த ஒரு முடிவை எதிர்பார்க்கவில்லை. இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றி இருக்க வேண்டிய ஒன்று. இறுதியில் இந்த தொடர் சமனில் முடிந்தது ஏமாற்றம் தான்.

இதையும் படிங்க : ஐபிஎல் தொடரின் போதே அந்த முடிவை ஏன் எடுக்கல – இந்திய தேர்வுக்குழுவை விளாசும் முன்னாள் வீரர், ரசிகர்கள்

ஆனால் இதேபோன்று டி20 மற்றும் ஒருநாள் தொடர் அமையாது. நிச்சயம் அந்த இரண்டிலும் இந்திய அணி தங்களது பலத்தை நிரூபிக்கும். ஏனெனில் ஒவ்வொரு வகையான கிரிக்கெட்டும் ஒவ்வொரு விதமானது என்று ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement