ஐபிஎல் தொடரின் போதே அந்த முடிவை ஏன் எடுக்கல – இந்திய தேர்வுக்குழுவை விளாசும் முன்னாள் வீரர், ரசிகர்கள்

IND
- Advertisement -

பர்மிங்காம் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்று வந்த 5-வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாப தோல்வியடைந்த இந்தியா 15 வருடங்கள் கழித்து அந்நாட்டில் டெஸ்ட் தொடரை வெல்லும் பொன்னான வாய்ப்பை நழுவ விட்டது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டியில் இம்முறை புதிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தலைமையில் வலுவாக மாறிய இங்கிலாந்தை கேப்டன் ரோகித் சர்மா இல்லாத நிலைமையில் பும்ரா தலைமையிலான இந்தியா எதிர்கொண்டது. அதில் முதல் 3 நாட்களில் அபாரமாக செயல்பட்டு வெற்றியை கையில் வைத்திருந்த இந்தியா கடைசி 2 நாட்களில் சொதப்பி வெற்றியை தாரை வார்த்தது.

ட்ரா செய்திருந்தால் கூட தொடரை வென்றிருக்கலாமே என்பது இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை புண்ணாக்கும் நிலையில் அடுத்ததாக ஜூலை 7-ஆம் தேதியன்று அதே இங்கிலாந்துக்கு துவங்கும் எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா களமிறங்குகிறது. அதில் இயன் மோர்கன் ஓய்வு பெற்றதால் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள ஜோஸ் பட்லர் தலைமையில் ஜேசன் ராய், மொயின் அலி போன்ற வீரர்களுடன் மீண்டும் இந்தியாவை மண்ணைக்கவ்வ வைக்க இங்கிலாந்து தயாராகியுள்ளது. இருப்பினும் இம்முறை அதை சமாளிக்க தினேஷ் கார்த்திக், பாண்டியா போன்ற தரமான வீரர்களுடன் கேப்டன் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவதால் இந்தியா வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சர்ச்சை அறிவிப்பு:
இந்த தொடருக்கு பின்பாக ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருடன் இங்கிலாந்து சுற்றுப்பயணம் நிறைவுக்கு வருகிறது. அதை தொடர்ந்து வெஸ்ட் இண்டீசுக்கு பறக்கும் இந்தியா 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. அதில் முதலாவதாக வரும் ஜூலை 22, 24, 27 ஆகிய ஆகிய தேதிகளில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.

அதில் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் மற்றொரு நட்சத்திரம் ஷிகர் தவான் கேப்டனாக அறிவிக்கப் பட்டுள்ளார். மேலும் விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா, ரிஷப் பண்ட் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோருக்கு இந்த தொடரில் ஒய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சஞ்சு சாம்சன், சுப்மன் கில், அர்ஷிதீப் சிங், ஆவேஷ் கான் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருப்பினும் இந்த அணி அறிவிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

நிலையற்ற இந்தியா:
ஏனெனில் ஏற்கனவே கேஎல் ராகுல், விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரித் பும்ரா, தினேஷ் கார்த்திக் என 7 வெவ்வேறு வீரர்கள் இந்த வருடம் 6 மாதம் முடிவதற்குள் இந்தியாவை பல்வேறு போட்டிகளில் கேப்டன்களாக வழி நடத்தியுள்ளனர். தற்போது ஷிகர் தவான் 8-வது கேப்டனாக செயல்படப்போவது எந்த வகையிலும் இந்திய அணிக்கு பலனளிக்காது என்று ரசிகர்கள் கூறப்படுகின்றனர்.

பொதுவாக ஒரு கேப்டன் தலைமையில் தொடர்ச்சியாக ஒரு அணி விளையாடினால் தான் தரமான வீரர்கள் தாமாகவே கிடைத்து உலக கோப்பை போன்ற மிகப்பெரிய தொடரை வெல்வதற்கு செட்டாக முடியும். ஆனால் இப்படி மாதத்திற்கு ஒரு கேப்டன்களை மாற்றினால் எப்படி நிலையான அணி கிடைத்து இந்தியாவால் உலக கோப்பையை வெல்ல முடியும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் 2022 தொடரை முடித்துவிட்டு தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து தொடரில் ஓய்வெடுத்து இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடிய விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் அப்படி என்ன அதிகப்படியான போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடி விட்டார்களா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அதுவும் டெஸ்ட் போட்டியில் விலகிய ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் மட்டும் பங்கேற்று விட்டு மீண்டும் ஓய்வெடுக்கும் அளவுக்கு அப்படி என்ன ஏராளமான போட்டிகளில் விளையாடி விட்டார்? 6 போட்டிகளில் தானே விளையாடப் போகிறார் என்று ரசிகர்கள் அதிருப்தி வெளிப்படுத்துகின்றனர்.

பதான் அதிருப்தி:
இதுவே ஐபிஎல் தொடரில் இதுபோல இந்த வீரர்கள் ஓய்வு எடுப்பார்களா என்ற நெத்தியடி கேள்வியையும் ரசிகர்கள் எழுப்புகின்றனர். ஒருவேளை விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சுமாரான பார்மில் இருப்பதால் பிரேக் எடுக்குமாறு முன்னாள் வீரர்கள் கூறுவதற்காக இதுபோன்ற முடிவுகள் எடுக்கப்படுகிறதா என்றும் ரசிகர்கள் சந்தேகிக்கின்றனர். ஒருவேளை அந்த அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டால் நிச்சயமாக எந்த பலனும் கிடைக்கப்போவதில்லை.

இதையும் படிங்க : IND vs ENG : இந்தியாவை அடிச்சுருக்கலாம், ஆனா எங்ககிட்ட முடியாது – இங்கிலாந்தை எச்சரிக்கும் ஆஸி நட்சத்திரம்

ஏனெனில் 3 மாதங்கள் தொடர்ச்சியாக ஓய்வெடுப்பதற்கும் ஒரு தொடரில் விளையாடி மற்றொரு தொடரில் ஓய்வெடுப்பதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. இதையே முக்கிய வீரர்களுக்கு இடையிடையே ஓய்வளிப்பது எந்த வகையிலும் அவர்கள் பார்முக்கு திரும்ப உதவாது என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement