- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இன்னும் முடிவு எடுக்கல.. ஆனா கண்டிப்பா சீக்கிரம் சொல்றேன்.. ஆஸ்திரேலிய தொடர் குறித்து – ரோஹித் சர்மா பேச்சு

ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி அந்த தொடரினை முற்றிலுமாக இழந்துள்ளது. இந்த தோல்வியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு செல்வதும் சிக்கலாகியுள்ளதால் இந்த விடயம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

முடிவு எடுத்ததும் நானே வந்து சொல்றேன் :

இந்நிலையில் அடுத்ததாக இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற இருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடரானது இன்னும் இரு வாரங்களில் பெர்த் நகரில் துவங்கவிருக்கிறது.

- Advertisement -

இந்த தொடரின் 5 போட்டிகளில் 4-ல் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதிபெற முடியும். இதன் காரணமாக இந்த ஆஸ்திரேலிய தொடரின் மீதான எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

ஏற்கனவே இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு அந்த தொடரின் முதல் போட்டியில் ரோகித் சர்மா விளையாடுவது சந்தேகம் என்றும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ரோகித் சர்மா ஆஸ்திரேலியா தொடரின் முதல் போட்டியில் விளையாடுவாரா? என்பது குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : நான் ஆஸ்திரேலியா தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக ஆஸ்திரேலியா செல்வேனா? என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் அது குறித்து முடிவெடுத்து உங்களுக்கு அறிவிப்பேன். தற்போதைக்கு எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரோகித் சர்மா ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியை நிச்சயமாக தவற விடுவார் என்று தெரிகிறது.

இதையும் படிங்க : இப்போகூட தோனி கூப்பிட்டால் அதை செய்ய தயாராக இருக்கிறேன்.. விருப்பத்தை தெரிவித்த – டேல் ஸ்டெய்ன்

ஆனாலும் ரோகித் சர்மா இடத்தில் அபிமன்யு ஈஸ்வரன் பேக்கப் வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளதால் முதல் போட்டியில் ரோஹித் விளையாடவில்லை என்றால் பும்ரா கேப்டனாகவும், மாற்று துவக்க வீரராக அபிமன்யு ஈஸ்வரனும் விளையாடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -