தற்போது 43 வயதை எட்டியுள்ள தோனி அடுத்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா? என்ற கேள்வி இருந்த வேளையில் சென்னை அணி அவரை அன் கேப்டு வீரராக தக்க வைத்துள்ளதால் நிச்சயம் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அவர் விளையாடிவிட்டு அத்துடன் தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தோனி மேலும் ஒரு சீசன் விளையாட இருப்பது அனைவரது மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தோனியுடன் பணியாற்ற எனக்கு விருப்பம் :
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று பல ஆண்டுகள் ஆகியிருந்தாலும் தற்போது வரை ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் தோனி குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகி அனைவரது மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் ஜாம்பவானான டேல் ஸ்டெயின் தோனியுடன் வேலை செய்ய வேண்டும் என்று விரும்பியதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதுமே நான் தோனியின் ரசிகனாக இருந்துள்ளேன்.
என்னுடைய கரியரின் கடைசி காலகட்டத்தில் கூட சிஎஸ்கே அணிக்காக விளையாட விரும்பினேன். அதோடு தோனியின் அருகில் இருந்து அந்த சூழல் எவ்வாறு இருக்கிறது? அவருடைய கிரிக்கெட் மூளை எவ்வாறு வேலை செய்கிறது? என்பதை பார்க்க ஆவலாக இருந்தேன். ஆனால் தோனியுடன் இணைந்து ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை.
ஒரு கேப்டனாக அவர் மிகச்சிறப்பான முடிவுகளை எடுத்துள்ளார். தென்னாப்பிரிக்க வீரர்கள் சிலர் சிஎஸ்கே அணியில் விளையாடி உள்ளதால் அவர்களிடம் தோனி குறித்து கேட்டு அறிந்து உள்ளேன். மாபெரும் கேப்டனான அவருடைய சிந்தனைகள் எவ்வாறு இருக்கும்? அவருடைய நுட்பம் எவ்வாறு இருக்கும் என்பதை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
இதையும் படிங்க : இத்தனை வருஷத்துல இதுதான் முதல்முறை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சறுக்கிய கிங் கோலி – விவரம் இதோ
இப்போது தோனி அழைத்தால் கூட நான் அவரது தலைமையில் விளையாட தயாராக இருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்புக்காகவும் காத்திருக்கிறேன் என டேல் ஸ்டெயின் கூறியது குறிப்பிடத்தக்கது.



