இத்தனை வருஷத்துல இதுதான் முதல்முறை.. டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக சறுக்கிய கிங் கோலி – விவரம் இதோ

Virat-Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது நவம்பர் ஒன்றாம் தேதி துவங்கி போட்டியின் மூன்றாம் நாளான இன்றுடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நியூசிலாந்து அணியானது இந்திய அணியை 25 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது.

மோசமான சாதனையை நிகழ்த்திய விராட் கோலி :

இந்த போட்டியில் அடைந்த வெற்றியின் மூலம் இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரை மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு இந்திய அணியின் மீதும் பல்வேறு விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிய இந்திய அணியின் மூத்த வீரர்கள் பேட்டிங்கில் தடுமாற்றத்தை சந்தித்ததே இந்த தோல்விக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த தொடரின் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கேப்டன் ரோஹித் சர்மா பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இந்த மூன்றாவது போட்டியில் விளையாடிய இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக மோசமான சாதனை ஒன்றினை சந்தித்துள்ளார். அந்த வகையில் சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக விராட் கோலி ஒரு போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.

- Advertisement -

இந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 4 ரன்களை மட்டுமே அடித்த விராட் கோலி இரண்டாவது இன்னிங்சிலும் ஒரு ரன் மட்டுமே அடித்திருந்தார். இதன் மூலம் இந்திய மண்ணில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து மோசமான நிலையை விராட் கோலி சந்தித்துள்ளார்.

இதையும் படிங்க : நமக்கு நாம தான் எதிரி.. திறமைக்கு பஞ்சமில்லை.. இதான் இந்தியாவின் தோல்விக்கு காரணம்.. ஹர்பஜன்

இருப்பினும் எதிர்வரும் ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அவர் மீண்டும் பழைய ஃபார்மூக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. கடந்த சில தொடர்களாகவே அவர்மீது விமர்சனங்கள் இருந்து வேளையில் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement