நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அந்தத் தொடரின் மூன்று போட்டிகளிலுமே மோசமாக விளையாடிய இந்தியா அடுத்தடுத்த தோல்விகளை சந்தித்தது. அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த முதல் அணியாக உலக சாதனை படைத்தது.
மறுபுறம் 93 வருடத்தில் முதல் முறையாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் வைட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இந்த தோல்விக்கு நியூசிலாந்து ஸ்பின்னர்களை இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக எதிர்கொள்ளாது முக்கிய காரணமானது. குறிப்பாக மும்பையில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் வெறும் 147 ரன்களை சேசிங் செய்ய முடியாமல் இந்தியா தோல்வியை சந்தித்தது.
உண்மையான காரணம்:
அதனால் ஸ்பின்னர்களுக்கு எதிராக எப்படி விளையாட வேண்டும் என்பதை இந்திய பேட்ஸ்மேன்கள் மறந்து விட்டார்களா என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. மேலும் ஐபிஎல் தொடரில் விளையாடி ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்ளும் திறமை இந்தியர்களிடம் மறந்து விட்டதாகவும் பேச்சுக்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்திய வீரர்களிடம் திறமையில் பஞ்சம் ஏற்படவில்லை என்று முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
மாறாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் சுழலுக்கு சாதகமான மைதானங்களை அமைப்பதாக அவர் விமர்சித்துள்ளார். அதுவே இந்தியாவின் இந்த சரித்திர தோல்விக்கு முக்கிய காரணமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வகையில் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்து இந்தியா தங்களுக்கு தாங்களே எதிரியாக செயல்பட்டதாக அவர் விமர்சித்துள்ளார்.
ஹர்பஜன் விளாசல்:
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சுழலுக்கு சாதகமான ஆடுகளங்கள் இந்தியாவின் சொந்த எதிரியாக வந்துள்ளது. அதில் உங்களை வீழ்த்திய நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். இதை நீண்ட வருடங்களாக சொல்லி வருகிறேன். உண்மையில் இந்தியாவுக்கு நல்ல பிட்ச்கள் தான் தேவைப்படுகிறது. இந்த சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் சுமாரானவர்களாக மாற்றுகிறது” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இந்தியாவின் ரசிகனா சொல்றேன்.. இதெல்லாம் தேவையில்லாதது.. அதுல முன்னேறுங்க.. சேவாக் விமர்சனம்
அவர் கூறுவது போல சமீப காலங்களாகவே இந்தியாவில் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. அதில் ஐபிஎல் தொடரில் விளையாடிய அனுபவங்களை வைத்து வெளிநாட்டு அணிகள் இந்தியாவை வீழ்த்துகின்றன. மறுபுறம் சுழலுக்கு சாதகமான பிட்ச்சை அமைத்து இந்தியா தங்களுடைய சொந்த வேளையிலேயே விழுந்து தோல்வியை சந்திப்பது குறிப்பிடத்தக்கது.



