- Advertisement -
இந்திய கிரிக்கெட்

அந்த 3 பசங்களையும் ஆஸ்திரேலியா கூட்டிட்டு போற பிளான் இருக்கு – ரோஹித் சர்மா அறிவிப்பு

அண்மையில் இந்திய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற இந்திய அணி அவர்களை இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் வீழ்த்தி அசத்தியது. அதனை தொடர்ந்து தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலிய தொடருக்கான பிளான் பற்றி பேசிய ரோஹித் சர்மா :

இந்த தொடருக்கு அடுத்து ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற உள்ள ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது.

- Advertisement -

நியூசிலாந்து தொடருக்கு பின்னர் நடைபெற இருக்கும் இந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்திய அணி மீண்டும் ஒருமுறை ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் தயாராகி வருகிறது. அதேவேளையில் ஏற்கனவே இந்திய அணியிடம் இரண்டு முறை சொந்த மண்ணில் தோல்வியை தழுவிய ஆஸ்திரேலிய அணி இம்முறை இந்திய அணியை பழிதீர்க்க காத்திருக்கிறது.

இதன் காரணமாக இந்த ஆஸ்திரேலிய தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தற்போது ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாயங்க் யாதவ், ஹர்ஷித் ராணா மற்றும் நிதீஷ்குமார் ரெட்டி ஆகியோரை ஆஸ்திரேலிய நாட்டிற்கு அழைத்து செல்ல திட்டம் இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : மாயங்க் யாதவ் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் தனது திறமையை நிரூபித்துள்ளார். ஆனாலும் அவர் அண்மையில் காயம் அடைந்து இருப்பதால் அவரை பக்குவமாக கையாள வேண்டும். அதன் காரணமாக அவரை நாங்கள் கண்காணித்து வருகிறோம். அதேபோன்று நிதீஷ்குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா ஆகியோரும் திறமையான வீரர்கள் தான்.

இதையும் படிங்க : இந்தியாவை எங்க டீம்ல தடை பண்ணிருக்கோம்.. மறுபடியும் ஜெய்ப்போம்.. பாகிஸ்தான் ஏ கேப்டன் பேட்டி

ஆனாலும் அவர்களிடம் டெஸ்ட் அனுபவம் குறைவாக உள்ளது. அதன் காரணமாகவே அவர்களை மாற்று வீரர்களாக கொண்டு சென்று இந்திய அணியுடன் இணைந்து பயணிக்க வைத்தால் நிச்சயம் பயிற்சியின் போது அவர்களுக்கு அனுபவம் கிடைக்கும். எனவே அவர்களை ஆஸ்திரேலியா அழைத்துச் செல்ல யோசித்து வருகிறோம் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -