நாளைய போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா? மாட்டாரா? – நேரடியான பதிலை அளித்த ரோஹித் சர்மா

Rohit-Sharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் முன்னணி துவக்க வீரரான சுப்மன் கில் இந்த 2023-ஆம் ஆண்டில் அட்டகாசமான பார்மில் இருந்து வருகிறார். நடைபெற்று முடிந்த ஆசியக் கோப்பை தொடர் வரை தனது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் இந்தியாவில் தற்போது நடைபெற்று வரும் நடப்பு உலகக் கோப்பை தொடரில் மிக முக்கியமான வீரராக பார்க்கப்பட்டார். இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடர் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னதாக அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அக்டோபர் 8-ஆம் தேதி சென்னை மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியை தவறவிட்டார்.

அதன் பின்னர் அக்டோபர் 11-ஆம் தேதி டெல்லியில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லி சென்ற இந்திய அணியுடன் பயணிக்காத சுப்மன் கில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள சுப்மன் கில் இந்திய அணி வீரர்களுடன் அகமதாபாத் நகருக்கு சென்றடைந்து தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் நாளை அக்டோபர் 14-ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மிக முக்கியமான போட்டி நடைபெறவுள்ளது.

இவ்வேளையில் இந்த போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா? என்பதே பலரது கேள்வியாகவும் உள்ளது. இந்நிலையில் அகமதாபாத் சென்றடைந்த சுப்மன் கில் வலைப்பயிற்சியில் பங்கேற்று விளையாடி வருவதால் அவர் விளையாடுவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது.

- Advertisement -

ஆனால் இது குறித்த முக்கிய முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் ரோகித் சர்மா தான் இருக்கிறார் என்பதனால் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் நாளைய போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோகித் சர்மா கூறுகையில் : 90% அவர் நாளைய போட்டியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்று நேரடியாக தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இப்போ விளையாடுற பிளேயர்ஸ்ல அந்த இந்திய வீரரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் – ட்ரென்ட் போல்ட் பதில்

இதன் காரணமாக நிச்சயம் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போட்டிக்கு முன்னதாக அவர் ஃபிட்டாக இல்லை என்றால் இஷான் கிஷன் விளையாடுவார் என்றும் ஒருவேளை அவர் முழுஉடற் தகுதியுடன் இருந்தால் இஷான் கிஷன் வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் சுப்மன் கில் விளையாடுவார் என்றும் எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement