இப்போ விளையாடுற பிளேயர்ஸ்ல அந்த இந்திய வீரரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் – ட்ரென்ட் போல்ட் பதில்

Trent-Boult
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 13-வது 50 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் உள்ள 10 வெவ்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் ரசிகர்களை மகிழ்விக்க காத்திருக்கும் வேளையில் முதல் வாரத்தினை கடந்து தற்போது இந்த உலகக் கோப்பை தொடரானது விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் நெதர்லாந்து என 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

- Advertisement -

இந்த பத்து அணிகளில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும்? என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒருமுறை மோதிய பின்னர் லீக் சுற்றின் முடிவில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும் என்கிற நிலையில் எல்லா அணிகளும் தற்போது மற்ற அணிகளுடன் லீக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றன.

அந்த வகையில் இந்த நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் மிக முக்கியமான 11-ஆவது லீக் ஆட்டத்தில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நியூசிலாந்து மற்றும் வங்கதேச அணிகள் விளையாடி வருகின்றன. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ட்ரென்ட் போல்டிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது.

- Advertisement -

அதற்கு அவரும் அது வெளிப்படையான பதில்களை அளித்துள்ளார். அந்த வகையில் இந்த பேட்டியின் போது அவர் அளித்த ஒரு பதில் தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியின் போது : தற்போதைய கிரிக்கெட்டில் உங்களுக்கு மிகவும் பிடித்த வீரர் யார்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ட்ரெண்ட் போல்ட் கூறுகையில் :

இதையும் படிங்க : 5 விக்கெட்ஸ் எடுத்து இந்தியாவை சாய்ச்சுட்டு அதை செய்றேன்.. இந்திய ரசிகர்களிடம் அப்ரிடி சப்தம்

தற்போதைய கிரிக்கெட் வீரர்களில் எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்றால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் என்று பதில் அளித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், டேவிட் வார்னர், பாபர் அசாம் போன்ற முன்னணி பேட்ஸ்மேன்கள் பலர் இருக்கையில் அவர்களை தேர்வு செய்யாமல் பும்ராவை தேர்வு செய்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement