5 விக்கெட்ஸ் எடுத்து இந்தியாவை சாய்ச்சுட்டு அதை செய்றேன்.. இந்திய ரசிகர்களிடம் அப்ரிடி சப்தம்

Shaheen Afridi
- Advertisement -

கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெறும் முக்கியமான லீக் போட்டியில் ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோத உள்ளது. அந்த போட்டியில் இந்தியாவை எப்படியாவது உலகக்கோப்பையில் முதல் முறையாக தோற்கடித்து வரலாற்றை மாற்ற வேண்டும் என்ற முனைப்புடன் பாகிஸ்தான் அணியினர் களமிறங்குகின்றனர்.

ஏனெனில் 1992 முதல் இதுவரை 50 ஓவர் உலகக் கோப்பைகளில் இந்தியாவை சந்தித்த 7 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்துள்ளது. எனவே அந்த சரித்திர தோல்விகளுக்கு இந்தியாவை இம்முறை அவருடைய சொந்த மண்ணில் வீழ்த்தி பழிக்கு பழி தீர்க்க வேண்டும் என்பதே பாகிஸ்தான் அணி மற்றும் ரசிகர்களின் எண்ணமாகவும் விருப்பமாகவும் இருக்கிறது.

- Advertisement -

அப்ரிடியின் சபதம்:
மறுபுறம் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தி அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாகவும் சொந்த மண்ணில் வலுவான அணியாகவும் திகழ்கிறது. மேலும் சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை அடித்த நொறுக்கிய இந்தியா 228 ரன்கள் வித்தியாசத்தில் வரலாறு காணாத வெற்றி பெற்றது.

எனவே அதே உத்வேகத்துடன் இம்முறை சொந்த மண்ணில் பாகிஸ்தானை தோற்கடித்து 8வது முறையாக உலகக் கோப்பையில் வெற்றியை பதிவு செய்ய இந்தியா போராட உள்ளது. அந்த சூழ்நிலையில் இப்போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் அணியினர் வலைப்பயிற்சி செய்த போது நட்சத்திர இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடியிடம் சில ரசிகர்கள் செல்ஃபி எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

- Advertisement -

அதற்கு “நிச்சயமாக செல்ஃபி எடுப்பதற்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆனால் இந்தியாவுக்கு எதிராக 5 விக்கெட்டுகளை எடுத்த பின்பே செல்ஃபி எடுத்துக் கொள்வேன்” என்று அவர் இந்திய ரசிகர்களிடம் சொல்லி விட்டு சென்றதாக வலைப்பயிற்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்த ரெவ்ஸ்போர்ட்ஸ் எனும் யூடியூப் பக்கத்தில் செய்தி வெளியாகியுள்ளது. அதாவது இப்போட்டியில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவை முதல் முறையாக தோற்கடித்த பின் செஃல்பி எடுத்துக் கொள்ளலாம் என இந்திய ரசிகர்களிடம் அப்ரிடி சபதம் செய்யும் வகையில் பேசியுள்ளார்.

இதையும் படிங்க: எப்டி போட்டாலும் மாதிரி அடிக்கிறாரு.. பாக் பவுலர்கள் திணறப் போறாங்க.. மிஸ்பா, வாசிம் அக்ரம் கவலை பேட்டி

முன்னதாக 2021 டி20 உலகக் கோப்பையில் ஆட்டநாயகன் விருது வென்ற அவர் பாகிஸ்தான் முதல் முறையாக இந்தியாவை தோற்கடிப்பதற்கு முக்கிய பங்காற்றினார். இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையிலும் இந்த உலகக் கோப்பையிலும் சுமாராக செயல்பட்டு வரும் அவர் இந்தியாவுக்கு எதிரான இப்போட்டியில் அசத்துவரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement