எப்டி போட்டாலும் மாதிரி அடிக்கிறாரு.. பாக் பவுலர்கள் திணறப் போறாங்க.. மிஸ்பா, வாசிம் அக்ரம் கவலை பேட்டி

Wasim Akram Mishbah Ul Haq
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி மதியம் 2 மணிக்கு அகமதாபாத் நடைபெறும் முக்கிய லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளாக திகழும் இவ்விரு அணிகள் மோதும் இப்போட்டியில் உலகக் கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் பாகிஸ்தான் களமிறங்குகிறது.

மறுபுறம் சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாக திகழும் இந்தியா கடந்த மாதம் இலங்கையில் நடைபெற்ற 2023 ஆசிய கோப்பையில் பாகிஸ்தானை 228 ரன்கள் வித்தியாசத்தில் அடித்து நொறுக்கி மெகா வெற்றி கண்டது. எனவே அதே உத்வேகத்துடன் இப்போட்டியிலும் சிறப்பாக விளையாடி உலகக்கோப்பையில் பாகிஸ்தானை 8வது முறையாக இந்தியா தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

எப்படி போட்டாலும்:
இந்நிலையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான கடந்த போட்டியில் எப்படி போட்டாலும் அடித்த ரோகித் சர்மாவுக்கு எதிராக பாகிஸ்தான் பவுலர்கள் திணறப்போவதாக முன்னாள் கேப்டன் மிஸ்பா-உல்-ஹக் கவலை தெரிவித்துள்ளார். அதே போல உலகக்கோப்பையில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கர் (6) சாதனையை உடைத்த ரோஹித் (7) நிச்சயம் பாகிஸ்தானுக்கு சவாலை கொடுப்பார் என்று அதே நிகழ்ச்சியில் ஜாம்பவான் வாசிம் அக்ரமும் தெரிவித்தார்.

இது பற்றி ஏ ஸ்போர்ட்ஸ் எனும் பாகிஸ்தான் தொலைக்காட்சியில் வாசிம் அக்ரம் பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா அழகாக விளையாடினார். குறிப்பாக ரிஸ்க் எடுக்காத அவர் அனைத்து ஷாட்டுகளையும் கச்சிதமாக அடித்தார். அவரிடம் மற்ற பேட்ஸ்மேன்களை விட அதிக டைமிங் இருக்கிறது. அதே போட்டியில் விராட் கோலி கட்டுப்பாட்டுடன் 55* ரன்கள் அடித்தார். ஆனால் ரோகித் சர்மா மிருகத்தைப் போல் வித்தியாசமாக அதிரடியாக விளையாடினார்” என்று கூறினார்.

- Advertisement -

அப்போது மிஸ்பா பேசியது பின்வருமாறு. “ரோகித் சர்மா இப்படி பேட்டிங் செய்ததை பார்த்த பின் அனைத்து அணிகளுக்கும் அழுத்தம் ஏற்பட்டிருக்கும். ஏனெனில் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் போட்டால் அவர் பவுண்டரி அடிக்கிறார். நேராக போட்டால் தலைக்கு மேல் அடிக்கிறார். ஷார்ட்டாக போட்டால் ஃபுல் ஷாட் வாயிலாக சிக்சர் அடிக்கிறார். அவருடைய பேட்டிங்கில் தவறுக்கான அடையாளம் குறைவாக இருப்பதால் பவுலர்களுக்கு எங்கே வீச வேண்டும் என்பது தெரிவதில்லை” என்று கூறினார்.

இதையும் படிங்க: உலககோப்பை வரலாற்றில் சச்சின்-சேவாக் சாதனையை முறியடித்து வங்கதேச ஜோடி – சரித்திர சாதனை

அதை தொடர்ந்து அக்ரம் பேசியது பின்வருமாறு. “அப்படியானால் எப்படி நீங்கள் போடுவீர்கள். பாகிஸ்தான் பவுலர்கள் அவருக்கு எதிராக கடினத்தை சந்திப்பார்கள். ஏனெனில் கடந்த 19 உலகக்கோப்பை போட்டிகளில் அவர் 7 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் கூட 44 இன்னிங்ஸில் 6 சதங்களும் சங்ககாரா 35 இன்னிங்ஸில் 5 சதங்களும் பாண்டிங் 42 இன்னிங்ஸில் 5 சதங்களும் அடித்தனர். ஆனால் அவர்களை விட விரைவாக அவர் 7 சதங்கள் அடித்தது அபாரமானது” என்று கூறினார்.

Advertisement