இங்கிலாந்து அணியை (4-1) என்ற கணக்கில் நாங்கள் துரத்தி அடிக்க இவர்களே காரணம் – ரோஹித் சர்மா பூரிப்பு

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இந்தியாவில் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தொடரின் முதல் நான்கு போட்டிகள் முடிவடைந்த வேளையில் இந்திய அணி மூன்றுக்கு ஒன்று (3-1) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியிருந்த வேளையில் ஐந்தாவது போட்டியிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

அதன்படி மார்ச் 7-ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கிய இந்த போட்டியானது மார்ச் 9-ஆம் தேதியான இன்று நடைபெற்ற மூன்றாம் நாள் ஆட்டத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஒரு இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

இதன்மூலம் இங்கிலாந்து அணியை நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் மண்ணை கவ்வ வைத்துள்ளது. இந்நிலையில் இந்த ஐந்தாவது டெஸ்ட் போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசியிருந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் :

இது போன்ற மிகப்பிரமாதமான் வெற்றியை நாம் பெறும்போது அனைத்துமே நமது வசமாக இருப்பது போல் தோன்றுகிறது. நமது அணியில் உள்ள இளம் வீரர்கள் நிறையவே கிரிக்கெட்டில் விளையாடி இருந்தாலும் இதுபோன்ற சர்வதேச போட்டிகளில் அழுத்தத்திற்கு மத்தியில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர்.

- Advertisement -

இந்த தொடரின் வெற்றிக்கு அணியில் உள்ள அனைவருமே காரணம். இதுபோன்ற ஒரு ஒட்டுமொத்தமான பிரமாதமான ஆட்டத்தை பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒருவர் நூறு ரன்கள் அடிப்பதை பற்றி நாம் அதிகமாக பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதைவிட ஒரு டெஸ்ட் போட்டியில் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தி வெற்றி பெறுவது என்பதுதான் சிறப்பான ஒன்று.

இதையும் படிங்க : 4 – 1.. பஸ்பால் இங்கிலாந்தை மூட்டை கட்டிய இந்தியா.. 112 வருடங்கள் கழித்து.. முதல் ஆசிய அணியாக சரித்திர வெற்றி

அந்த வகையில் நமது அணியின் பந்துவீச்சாளர்கள் பொறுப்பினை கையில் எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இந்த ஐந்தாவது போட்டியில் குல்தீப் யாதவ் மிகச் சிறப்பாக பந்துவீசியிருந்தார். காயத்திற்கு பிறகு தனது பந்துவீச்சில் நல்ல முன்னேற்றத்தை கண்டுள்ள அவர் இந்த தொடரில் அற்புதமாக செயல்பட்டார் என ரோகித் சர்மா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement