4 – 1.. பஸ்பால் இங்கிலாந்தை மூட்டை கட்டிய இந்தியா.. 112 வருடங்கள் கழித்து.. முதல் ஆசிய அணியாக சரித்திர வெற்றி

IND vs ENG 55
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட பெரிய டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடிய இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல விளையாடும் பஸ்பால் அணுகுமுறையை பயன்படுத்தி இந்தியாவை அந்த அணி தோற்கடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் சுதாரித்த இந்தியா ஹாட்ரிக் வெற்றிகளை பெற்று 3 – 1* (5) என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே கோப்பையை வென்றது.

அந்த நிலையில் இத்தொடரின் சம்பிரதாயக் கடைசி போட்டி மார்ச் 7ஆம் தேதி தரம்சாலா நகரில் துவங்கியது. அதில் ஆறுதல் வெற்றி பெறும் எண்ணத்துடன் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி ஜாக் கிராவ்லி 79 ரன்கள் எடுத்ததால் 100/1 என்ற துவக்கத்தை பெற்றது. ஆனால் அதன் பின் அபாரமாக பந்து வீசி அந்த அணியை 218 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 5, அஸ்வின் 4 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

- Advertisement -

112 வருடங்கள் கழித்து:
அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் 57, ரோஹித் சர்மா 103, சுப்மன் கில் 110, தேவ்தூத் படிக்கல் 65, சர்பராஸ் கான் 56 என டாப் 5 பேட்ஸ்மேன்களும் 15 வருடங்கள் கழித்து 50+ ரன்கள் குவித்து அபாரமான துவக்கத்தை கொடுத்தனர். அவர்களுடன் குல்தீப் யாதவ் 30, பும்ரா 20 ரன்கள் எடுத்ததால் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 477 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயா பஷீர் 5 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத்தொடர்ந்து 229 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு ஜாக் கிராவ்லி 0, பென் டக்கெட் 2, ஓலி போப் 19 என டாப் 3 பேட்ஸ்மேன்களை ரவிச்சந்திரன் அஸ்வின் சொற்ப ரன்களில் காலி செய்தார். அதனால் 36/3 என ஆரம்பத்திலேயே தடுமாறிய இங்கிலாந்துக்கு ஜோ ரூட் நிதானமாக விளையாடினார். ஆனால் அடுத்ததாக வந்த ஜானி பேர்ஸ்டோ 100வது போட்டியில் அதிரடியாக விளையாட முயற்சித்து 39 (31) ரன்களில் குல்தீப் சுழலில் அவுட்டானார்.

- Advertisement -

அதற்கடுத்ததாக வந்த கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2, பென் போக்ஸ் 8 ரன்களில் அஸ்வின் சுழலில் கிளீன் போல்ட்டானார்கள். அதே போல நங்கூரத்தை போட முயன்ற டாம் ஹார்ட்லியை 20 ரன்களில் அவுட்டாக்கிய பும்ரா அடுத்ததாக வந்த மார்க் வுட்டை டக் அவுட்டாக்கினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் அரை சதமடித்து முழுமூச்சுடன் போராடிய ஜோரூட்டும் கடைசியில் 84 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதியில் இங்கிலாந்தை 195 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியாவுக்கு அஸ்வின் 5, குல்தீப் 2, பும்ரா 1, ஜடேஜா 1 விக்கெட்டுகள் எடுத்தனர். அதனால் 4 – 1 (5) என்ற கணக்கில் இத்தொடரை வென்ற இந்தியா அதிரடியாக வீழ்த்தி சாய்ப்போம் என்று எச்சரித்த பஸ்பால் இங்கிலாந்து அணியை மூட்டை கட்டி கோப்பையை வென்றது.

இதையும் படிங்க: 7 விக்கெட்ஸ்.. ஆஸியை சுருட்டிய ஹென்றி.. 24 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை.. நியூஸிலாந்து கம்பேக் கொடுக்குமா?

சொல்லப்போனால் இதன் வாயிலாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 112 வருடங்கள் கழித்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 – 1 என்ற கணக்கில் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற மாபெரும் வரலாற்றை இந்தியா படைத்துள்ளது. இதற்கு முன் உலக அளவில் 1897/98, 1901/02 ஆகிய வருடங்களில் இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியாவும் (2 முறை) 1911/12இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து மட்டுமே முதல் போட்டியில் தோற்றும் கடைசியில் 4 – 1 (5) என்ற கணக்கில் தொடரை வென்றது.

Advertisement