7 விக்கெட்ஸ்.. ஆஸியை சுருட்டிய ஹென்றி.. 24 வருட சாதனையை தகர்த்து புதிய சாதனை.. நியூஸிலாந்து கம்பேக் கொடுக்குமா?

Matt henry
- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. அதில் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. அந்த நிலையில் மார்ச் 8ஆம் தேதி கிறிஸ்ட்சர்ச் நகரில் துவங்கிய 2வது போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூஸிலாந்து சுமாராக விளையாடி 162 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அந்த அணிக்கு 100வது போட்டியில் விளையாடிய கேன் வில்லியம்சன் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக டாம் லாதம் 38, மாட் ஹென்றி 29 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 5, மிட்சேல் ஸ்டார்க் 3 விக்கெட்டுகள் எடுத்தனர். அதைத்தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியாவுக்கு துவக்க. வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித் 11, உஸ்மான் கவாஜா 16 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

மிரட்டிய ஹென்றி:
அப்போது வந்த மார்னஸ் லபுஸ்ஷேன் நங்கூரத்தை போட்டு நிதானமாக விளையாடினார். ஆனால் எதிர்ப்புறம் வந்த கேமரூன் கிரீன் 25, டிராவிஸ் ஹெட்டை 21 ரன்களில் தனது அதிரடியான வேகத்தால் அவுட்டாக்கிய மாட் ஹென்றி நைட் வாட்ச்மேன் நேதன் லயனையும் 20 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

இருப்பினும் மறுபுறம் அரை சதமடித்து தொடர்ந்து சிறப்பாக விளையாடிய மார்னஸ் லபுஸ்ஷேன் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரியுடன் 90 ரன்களில் கேப்டன் சௌதீ வேகத்தில் அவுட்டானார். இறுதியில் அலெக்ஸ் கேரி 14, மிட்சேல் ஸ்டார்க் 28, பட் கமின்ஸ் 23 ரன்கள் எடுத்த போதிலும் ஆஸ்திரேலியாவை 300 ரன்கள் கூட தொட விடாத நியூசிலாந்து 256 ரன்களுக்கு சுருட்டியது.

- Advertisement -

அந்த அணிக்கு அதிகபட்சமாக மாட் ஹென்றி 23 ஓவரில் 4 மெய்டன் உட்பட 67 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் வாயிலாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் சிறந்த பவுலிங்கை (67/7) பதிவு செய்த நியூசிலாந்து வீரர் என்ற ஜாம்பவான் டேனியல் வெட்டோரியின் 24 வருட சாதனையை உடைத்த அவர் புதிய சாதனை படைத்தார். இதற்கு முன் 2000ஆம் ஆண்டு ஆக்லாந்து மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டேனியல் வெட்டோரி 87 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்ததே முந்தைய சாதனையாகும்.

இதையும் படிங்க: 36/3 என டாப் ஆர்டரை காலி செய்த அஸ்வின்.. அடம் பிடித்து குழியில் விழுந்த இங்கிலாந்து.. இந்தியா இன்றே சாதிக்குமா?

அதன் பின் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் நியூசிலாந்து இரண்டாவது நாள் முடிவில் 134/2 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை விட 40 ரன்கள் முன்னிலை பெற்று கம்பேக் கொடுக்கப் போராடி வருகிறது. அந்த அணிக்கு வில் எங் 1 ரன்னில் அவுட்டானாலும் தன்னுடைய 100வது போட்டியில் கேன் வில்லியம்சன் சிறப்பாக விளையாடி 51 ரன்கள் குவித்து அவுட்டானார். தற்போது களத்தில் டாம் லாதம் 65*, ரச்சின் ரவீந்தரா 11* ரன்களுடன் உள்ளனர்.

Advertisement