IND vs ENG : இப்படி நடந்தா நாங்க எப்படி ஜெயிக்க முடியும் – தோல்விக்கு பின்னர் ரோஹித் சர்மா பேசியது என்ன?

Rohit
- Advertisement -

டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது அரையறுதி போட்டியானது இன்று அடிலெயிடு கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 63 ரன்களையும், விராட் கோலி 50 ரன்கள் குவித்தனர்.

ENg vs IND Jos Buttler Alex hales

- Advertisement -

பின்னர் 169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணியானது 16 ஓவர்களின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 170 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் அவர்கள் பாகிஸ்தான் அணியுடன் இறுதி போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில் : இந்த போட்டியில் நாங்கள் தோல்வி அடைந்தது எங்களுக்கு மிகப்பெரும் வருத்தத்தை அளித்துள்ளது. இந்த போட்டியில் இரண்டாம் பாதியில் நாங்கள் மிகச் சிறப்பாகவே பேட்டிங் செய்து ஒரு சாதகமான ரன்குவிப்பை வழங்கியதாகவே நினைக்கிறோம்.

Virat Kohli Suryakumar Yadav.jpeg

ஆனால் பந்துவீச்சில் இன்று நாங்கள் நினைத்த திட்டங்கள் எதுவும் செயல்படவில்லை. இன்றைய போட்டி எங்களுடைய நாளாக அமையவில்லை. இது போன்ற நாக் அவுட் போட்டிகளில் பிரஷரை கையாள்வது என்பது முக்கியமான ஒன்றாகும். அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் நமது அணி வீரர்கள் அதனை சிறப்பாக கையாண்டு இருந்தாலும் இந்த போட்டியில் அதனை கையாளவில்லை.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எங்களுடைய வெற்றியை அபகரித்துக் கொண்டனர். இந்த போட்டியின் போது முதல் ஓவரிலேயே பந்து ஸ்விங் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் சரியான இடத்தில் பந்து வீசியும் பந்து ஸ்விங் ஆகவில்லை. மேலும் எந்த ஒரு இடத்திலும் நாங்கள் நினைத்த எந்த ஒரு திட்டமும் இந்த போட்டியின் போது பலிக்கவில்லை.

இதையும் படிங்க : பாவம்ங்க ஒரு மனுஷன் இதுக்கு மேல எவ்ளோ போராட முடியும், 2014 முதல் தொடரும் கிங் கோலியின் – சோக புள்ளிவிவரம் இதோ

இது மொத்தத்தில் எங்களுடைய நாளாகவும் அமையவில்லை. ஒரு போட்டியின் போது உங்களது திட்டம் சரியாக அமையவில்லை என்றால் இதுபோன்ற நிலைமை ஏற்படும் என தோல்வி குறித்து ரோகித் சர்மா பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement