பாவம்ங்க ஒரு மனுஷன் இதுக்கு மேல எவ்ளோ போராட முடியும், 2014 முதல் தொடரும் கிங் கோலியின் – சோக புள்ளிவிவரம் இதோ

Virat Kohli Suryakumar Yadav.jpeg
- Advertisement -

வரலாற்றில் 8வது முறையாக ஆஸ்திரேலியாவில் கோலாகலமாக நடைபெற்று வரும் ஐசிசி டி20 உலக கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரில் 2007க்குப்பின் 2வது கோப்பையை வெல்லும் லட்சியத்துடன் களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வழக்கம் போல சூப்பர் 12 சுற்றில் 5 போட்டிகளில் 4 வெற்றிகள் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. ஆனால் வழக்கம் போல நவம்பர் 10ஆம் தேதியன்று வலுவான இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற நாக் அவுட் போட்டியில் சொதப்பிய இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்து பெட்டி படுக்கையை கட்டிக்கொண்டு இந்த உலகக் கோப்பைலிருந்து பரிதாபமாக வெளியேறியது ரசிகர்களை மீண்டும் ஏமாற்றமடைய வைத்துள்ளது.

புகழ் பெற்ற அடிலெய்ட் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில் போராடி 168/6 ரன்கள் சேர்த்தது. கேஎல் ராகுல் 5, கேப்டன் ரோகித் சர்மா 27, சூரியகுமார் யாதவ் 14 என முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றிய இந்தியாவுக்கு அதிகபட்சமாக நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 50 (40) ரன்களும் கடைசி நேரத்தில் மிரட்டிய ஹர்திக் பாண்டியா 63 (33) ரன்களும் குவித்தனர். அதைத்தொடர்ந்து 169 ரன்களை துரத்திய இங்கிலாந்துக்கு அலெக்ஸ் ஹெல்ஸ் 86* (47) ஜோஸ் பட்லர் 80* (49) என தொடக்க வீரர்களே முதல் பந்திலிருந்து சுமாராக செயல்பட்ட இந்திய பவுலர்களை அடித்து நொறுக்கி 16 ஓவரிலேயே 170/0 ரன்களை எடுக்க வைத்து எளிதான வெற்றி பெற வைத்தனர்.

- Advertisement -

பாவம்ங்க கிங் கோலி:
அதனால் நவம்பர் 13ஆம் தேதியன்று நடைபெறும் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ள இங்கிலாந்து தகுதி பெற்ற நிலையில் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்டு இந்தியா வெளியேறியது. இதனால் சோகமடைந்துள்ள இந்திய ரசிகர்கள் நம்பிக்கை நாயகன் விராட் கோலியை நினைத்து மேலும் சோகமடைகிறார்கள். ஏனெனில் 2019க்குப்பின் சதமடிக்கவில்லை என்பதற்காக இதே உலகக்கோப்பைலிருந்து அதிரடியாக நீக்கக் கோரிய முன்னாள் வீரர்களை சமீபத்திய ஆசிய கோப்பையில் சதமடித்து கைதட்டி பாராட்ட வைத்த அவர் இந்த உலகக் கோப்பையில் பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியிலேயே அசாத்தியமான இன்னிங்ஸ் விளையாடி வரலாற்று வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

மேலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியை தவிர்த்து அனைத்து போட்டிகளிலும் அசத்திய அவர் 296 ரன்களை 98.67 என்ற அபாரமான சராசரியில் விளாசி இந்த உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார். அதிலும் குறிப்பாக சூரியகுமார் தவிர்த்து எஞ்சிய பேட்ஸ்மேன்கள் சொதப்பிய பெரும்பாலான போட்டிகளில் அவர் விளையாடிய அபாரமான ஆட்டம் தான் இந்தியாவை அரையிறுதி வரை அழைத்து வந்தது. ஆனால் அவ்வளவு கடினமாக உழைத்தும் இறுதியில் கோப்பை கிடைக்கவில்லை என்பது நிச்சயமாக வேதனையான அம்சமாகும்.

- Advertisement -

1. அதிலும் 2014 டி20 உலக கோப்பையில் 319 ரன்களை 106.33 என்ற அபாரமான சராசரியில் எடுத்த அவர் 2016 டி20 உலக கோப்பையில் 273 ரன்களை 136.50 என்ற அற்புதமான சராசரியில் எடுத்த போதிலும் இதே போல் ஃபைனல் மற்றும் செமி பைனலில் முறையே இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸிடம் தோற்று இந்தியா வெளியேறியது.

2. அதிலும் குறிப்பாக 72*, 77, 89*, 50 என 2014 முதல் இதுவரை நடைபெற்ற 4 டி20 உலக கோப்பைகளில் இந்தியா விளையாடிய 4 நாக் அவுட் போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக 50க்கும் மேற்பட்ட ரன்களை குவித்தும் இதர வீரர்களின் சொதப்பலால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

அது போக ஏற்கனவே டி20 உலக கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள், அதிக அரை சதங்கள், அதிக பேட்டிங் சராசரி, அதிக ஆட்டநாயகன் விருதுகள், அதிக தொடர் நாயகன் விருதுகள், நாக் அவுட் போட்டிகளில் அதிக ரன்கள் என அத்தனை உலக சாதனைகளையும் படைத்து அபாரமான செயல்பாடுகளை வெளிப்படுத்தியும் இதர வீரர்களின் சொதப்பலால் அவரது கைகளால் கோப்பையை மட்டும் தொட முடியவில்லை. இதை பார்க்கும் போது “ஒரு வீரன் ஒரு கோப்பையை வெல்ல இதற்கு மேல் எவ்வளவு தான் போராட முடியும் பாவம்” என்று அனைத்து ரசிகர்களும் சமூக வலைதளங்களில் சோகத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

Advertisement