IND vs PAK : பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கான பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும்? – ரோஹித் அளித்த பதில்

IND-vs-PAK-Rohit
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது ஆசிய கோப்பை தொடருக்கு முன்னதாக எதிர்வரும் இந்த தொடர் குறித்து பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அந்த வகையில் ரோகித் சர்மா கூறுகையில் : ஏற்கனவே இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களுக்கும் தொடர் தகுதி சோதனைகள் முடிந்து விட்டதாகவும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் அனைத்து வீரர்களும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஆசிய கோப்பை என்பது வீரர்களின் உடற்பகுதியை சோதிக்கும் போட்டியா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் கூறுகையில் : இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட காம்பினேஷன்களை நாங்கள் முயற்சி செய்து பார்க்க மனதில் திட்டம் வைத்துள்ளோம். தற்போதைய நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா ஃபிட்னஸில் மட்டுமின்றி பந்துவீச்சிலும் அசத்தலாக செயல்பட்டு வருவதாகவும் ரோகித் சர்மா கூறியுள்ளார்.

- Advertisement -

அதோடு நடைபெற்று முடிந்த பயிற்சி போட்டிகளின் முடிவில் எந்த வகையான அணியை தேர்வு செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைத்துள்ளதாகவும், பேட்டிங் வரிசையில் நம் அணியிடம் நல்ல அனுபவம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு பேட்ஸ்மேன்கள் தனது பொறுப்பு உணர்ந்து விளையாட வேண்டும் என்றும் எப்போதும் வெற்றிக்காக உழைப்பினை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

எதிர்வரும் போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடுவது அவசியம். அதே நேரத்தில் களத்தில் இருக்கும் வீரர்களே சரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 36 வயதான ரோஹித் சர்மா ஆசியக் கோப்பை தொடரானது சோதனை நேரம் இல்லை என்றும் இப்போதைக்கு வெற்றி பெறுவதில் மட்டுமே எங்களது கவனம் இருக்கிறது என்று கூறினார்.

- Advertisement -

மேலும் போட்டிகளில் தோல்வி அடைந்ததால் ஏற்பட்டுள்ள மனவேதனை குறித்து பேசிய அவர் கூறுகையில் : ஒவ்வொரு அணிக்குமே தோல்வி என்பது ஒரு பாடத்தை கற்றுத்தரும். அப்படி பெறும் பாடத்திலிருந்து மீண்டு எவ்வாறு வருகிறோம் என்பதையே யோசித்து நாங்கள் இந்த தொடரில் வெற்றி பெற மட்டுமே கவனத்தை செலுத்த போகிறோம் என்றும் கூறியிருந்தார்.

இதையும் படிங்க : ஜெய்க்கிறது கஷ்டம் தான், பாகிஸ்தான்ட்டா 3 தரமான பவுலர்கள் இருக்கலாம் ஆனா இந்தியாகிட்ட அது இருக்கு – ஹெய்டன் அதிரடி பேட்டி

அதோடு ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு அமையும் என்கிற கேள்விக்கு பதிலளித்த அவர் : தற்போதைக்கு ஒரு அணி எங்களது மனதில் இருந்தாலும் போட்டியின் சூழ்நிலை மற்றும் அணியின் பேலன்ஸ் என இரண்டையும் கணக்கில் கொண்டே இந்திய அணியின் பிளேயிங் லெவன் தேர்வு செய்யப்படும் என்று அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement