ஜெய்க்கிறது கஷ்டம் தான், பாகிஸ்தான்ட்டா 3 தரமான பவுலர்கள் இருக்கலாம் ஆனா இந்தியாகிட்ட அது இருக்கு – ஹெய்டன் அதிரடி பேட்டி

Matthew Hayden 2
Advertisement

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியில் வெல்லப்போவது யார் என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் காணப்படுகிறது. அதில் தற்சமயத்தில் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தான் ஏற்கனவே தங்களுடைய முதல் போட்டியில் நேபாளை துவம்சம் செய்து வெற்றி கண்டது. மேலும் காயங்களை சந்திக்காத வீரர்களுடன் ஃபிட்டாக இருக்கும் அந்த அணி ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களைக் கொண்ட வலுவான அணியாக திகழ்வதால் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்புள்ளதாக நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள்.

ஏனெனில் கேஎல் ராகுல் காயத்தால் விளையாடாததால் பலவீனமான மிடில் ஆர்டரை கொண்டிருக்கும் இந்திய அணி இதற்கு முன் ஷாஹீன் அஃப்ரிடி போன்ற இடது கை வேகப்பந்து வீச்சாளர்களிடம் அதிகமாக தடுமாறியுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் பாகிஸ்தானின் 3 தரமான பவுலர்கள் இந்தியாவுக்கு மிகப்பெரிய சவாலை கொடுப்பார்கள் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் முன்னாள் வீரர் மேத்தியூ ஹைடன் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

வெற்றியாளர் யார்:
இருப்பினும் ஆழமான பேட்டிங் வரிசையை கொண்டுள்ள இந்தியா நல்ல ஃபார்மில் இருக்கும் பேட்ஸ்மேன்களை கொண்டிருப்பதால் அவர்களுக்கு சவாலை கொடுத்து வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “இந்தியா 3 சிறப்பான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாட உள்ளது. ஹரிஷ் ரவூப், ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா ஆகிய 3 தனித்துவமான பவுலர்களை எதிர்கொள்ள இந்தியாவுக்கு தனித்துவமான திட்டங்கள் தேவைப்படுகிறது”

“முதலில் போட்டி நடைபெறும் கண்டி மைதானம் பவுன்ஸ்க்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஹரிஷ் ரவூப் ஆஃப் ஸ்டம்ப்பின் டாப்பை அடிக்கும் அளவுக்கு சவாலை கொடுப்பார். அதே போல ஷாஹீன் அப்ரிடிக்கு எதிராக நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக கடந்த உலகக் கோப்பையில் அவர் ஆரம்ப கட்டத்திலேயே விக்கெட்களை எடுத்தார் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதிலும் கேப்டன் ரோஹித் சர்மாவை அவர் அவுட்டாக்கிய பந்தை நாங்கள் மறக்க மாட்டோம்”

- Advertisement -

“எனவே ஷாஹீன் அப்ரிடியின் ஸ்விங் பந்துகளுக்கு எதிராக கொஞ்சம் எச்சரிக்கையாக இருந்து முதல் 3 ஓவர்களை சிறப்பாக விளையாட பாருங்கள். அதே போல நசீம் ஷா பந்தின் கோண வடிவத்தை மாற்றி வீசும் அளவுக்கு திறமை கொண்டவர். அந்த வகையில் சாதகத்தை கொண்டுள்ள பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு நசீம் ஷா போன்றவரை இந்தியா அதிரடியாக எதிர்கொள்ள வேண்டும். குறிப்பாக போட்டியில் நீங்கள் முன்னிலையில் இருப்பது போன்ற அழுத்தத்தை அவர்களுக்கு உண்டாக்குங்கள்”

இதையும் படிங்க: இன்னும் 2 ரன் தான் தேவை. சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் மாபெரும் சாதனையை படைக்க காத்திருக்கும் – ரோஹித் கோலி ஜோடி

“இறுதியில் எது எப்படியிருந்தாலும் இப்போட்டியில் இந்தியா வெல்லும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர்களிடம் க்ளாஸான மிகவும் ஆழமான பேட்டிங் வரிசை இருக்கிறது. அவர்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள் என்பதால் இந்த சவாலை சமாளிப்பார்கள் என்று நினைக்கிறேன்” எனக் கூறினார்.

Advertisement